“இந்திய டி20 அணியில் இந்த 21 வயசு பையனுக்கு இடம் கிடைக்காது.. ஓபனர் இவங்கதான்!” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிரடி பேட்டி!

0
161
Sanjay

இந்திய அணி தனது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் நாளை மறுநாள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்த டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் ஜெயஸ்வால், ருத்ராஜ் துவக்க ஆட்டக்காரர்களாக இருக்கின்ற நிலையில், மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் கில்லும் வருகிறார்.

- Advertisement -

மேலும் இதே அணியில் ஸ்ரேயாஸ் ஐயரும் இடம் பெற்றிருக்கிறார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பர்களாக மேல் வரிசையில் விளையாடும் இஷான் கிஷான், கீழ் வரிசையில் விளையாடும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் யார் விளையாட வேண்டும் என்று பேசிய சஞ்சய் மஞ்சுரேக்கர் “ருத்ராஜ் மற்றும் ஜெயஸ்வால் துவக்க ஜோடியை தொந்தரவு செய்ய இந்திய அணி நினைக்குமா?. கில்லும் துவக்க இடத்தில் நன்றாக செயல்பட்டு இருக்கிறார். நான் நிச்சயம் ருத்ராஜ் மற்றும் ஜெயஸ்வால் ஜோடியை தொந்தரவு செய்ய மாட்டேன். கில் மூன்றாம் இடத்தில் விளையாட வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக இர்பான் பதான் கூறும்பொழுது “ஓபனிங் செய்யக்கூடிய மூன்று பேர் அணியில் இருந்தால் முன்னோக்கி சிந்திக்க கூடியது அவசியம். குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் நீங்கள் சீக்கிரத்தில் ஒரு விக்கெட்டை இழந்தால், அடுத்து வந்து விளையாடக் கூடியவருக்கு அனுபவம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எனவே மூன்றாவது இடத்தில் புதிய பந்தில் கில் சரியானவராக இருப்பார்.

- Advertisement -

எனக்கு நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் வருவார். ஐந்தாவது இடத்தில் சூரியகுமார் இருப்பார். கீழ் வரிசையில் விளையாட வேண்டிய காரணத்தினால் இசான் கிஷான் விளையாட முடியாது. ஜிதேஷ் சர்மாதான் விளையாடுவார். மேலும் ஸ்ரேயாஸ் இருக்கின்ற காரணத்தினால் திலக் வர்மாவுக்கு இடமே கிடைக்காது!” என்று கூறியிருக்கிறார்!