“எங்களை சுருட்டனும்னு நினைக்கிறிங்க.. சரிபோய் வேற பிளான் பண்ணுங்க” – மார்க் வுட் சவால் பேச்சு

0
60
Wood

இங்கிலாந்து அணி இந்தியா அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஜனவரி 25ஆம் தேதி முதல் போட்டியின் மூலம் துவங்கியது.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவனை ஒரு நாள் முன்னதாகவே இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டது.

- Advertisement -

இதில் ஆச்சரியப்படுத்தும் ஒரு அறிவிப்பாக அனுபவ ஆண்டர்சனை வெளியில் வைத்து அதிவேக பந்துவீச்சாளர் மார்க் வுட்டை உள்ளே சேர்த்து இருந்தார்கள்.

மேலும் இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயமாக ஒரே ஒரு வேகப் பந்துவீச்சாளராக மார்க் வுட் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தார். மேலும் லீச் தவிர மற்ற எல்லோரும் அனுபவம் மற்ற சுழற் பந்துவீச்சாளர்களாக இருந்தார்கள்.

இந்த அணி எப்படி இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் அதுவும் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தும் என்று அனைவரும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில்தான் இந்திய அணியை முதல் இரண்டு இன்னிங்ஸ் முடிவின்போது பின்னடைவில் இருந்து மீண்டு வந்து வீழ்த்தி இங்கிலாந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

மேலும் இந்திய அணி தற்போது உடனடியாக பதிலடி தருவதற்கு இரண்டாவது டெஸ்டில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அடுத்த போட்டியில் இதேபோல ஒரு முடிவு வந்தால் இந்திய அணியால் மீண்டு வருவது கடினம் ஆகிவிடும்.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இங்கிலாந்தின் மார்க் வுட் கூறும்பொழுது “இந்திய அணி இப்பொழுது எங்களுக்கு எதிராக வேறு ஏதாவது திட்டத்தை கொண்டு வர வேண்டும். நாங்கள் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறோம். இது ஐந்து போட்டி கொண்ட தொடர் என்பதால் இது ஒரு போராக இருக்கப் போகிறது. நாங்கள் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று இந்தியாவுக்கு நிரூபித்து இருக்கிறோம்.

இதையும் படிங்க : “இந்திய அணிக்கு நெருக்கடி வர்றப்ப.. எப்பவும் காப்பாத்தறது இந்த 2பேர்தான்” – கம்மின்ஸ் புகழ்ச்சி

இது எங்களுடைய மிகப்பெரிய வெற்றி. மக்கள் எங்கள் மீது சிறிது சந்தேகம் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்பொழுது எங்கள் அணியில் முழுமையான நம்பிக்கை நிலவுகிறது. ஒரு பெரிய வேலையாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் இது எங்களுடைய மகத்தான சாதனை. இப்பொழுது எங்களால் ஏதாவது செய்ய முடியும் என்று காட்டி விட்டோம். எனவே இந்தியா வேறு திட்டங்களை உருவாக்க வேண்டும்.

இந்தியா ஒரு சிறந்த அணி. எனவே எங்களை அவர்கள் சுருட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் அடுத்து எந்த மாதிரியான ஆடுகளத்தை உருவாக்குவார்கள் என்று தெரியாது. ஆனால் அவர்களால் இங்கு எந்த மாதிரி ஆடுகளத்தையும் உருவாக்கும் திறன் இருக்கிறது. இதனால் அவர்கள் இப்படித்தான் செய்யப் போகிறார்கள் என்கின்ற அறிவிப்பு இது கிடையாது” என்று கூறியிருக்கிறார்.