“நான் இனி திரும்பிய வரமாட்டேனு சொன்னாங்க.. என் மனைவி மூலமா தெரிஞ்சது!” – பும்ரா முதல்முறையாக அதிரடியான பேச்சு!

0
4738
Bumrah

இன்று பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் யார் முதலிடத்தில் இருந்தாலும், உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் தற்போது ஜஸ்பிரித் பும்ராதான்.

காரணம் அவரால் ஆட்டத்தில் எந்த இடத்திலும் திருப்புமுனையை கொண்டு வர முடிந்த அளவுக்கு கையில் திறமையை வைத்திருக்கிறார். அவரால் புதிய பந்தில் வீச முடியும், 20 ஓவர் தாண்டியதும் உடனே வர முடியும். மேலும் பழைய பந்தில் கடைசியில் மிகச் சிறப்பாக வீச முடியும்.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காமல் போனாலும் கூட, அவரிடம் இருக்கும் சில வேரியேஷன்கள் விக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்து விடும். இப்படி போட்டியில் ஆடுகளத்தை கழிக்க கூடிய பந்துவீச்சாளர்கள் என்று தற்காலத்தில் யாரும் கிடையாது.

இதன் காரணமாகத்தான் பும்ரா தற்போதைய கிரிக்கெட் உலகத்தில் மிகச்சிறந்த தனி ஒரு வேகப்பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். நடப்பு உலகக் கோப்பையில் போட்டியில் எல்லா பாகத்திலும் அவர் பந்து வீசியதில் எப்படியான தாக்கத்தை கொடுத்து இருக்கிறார் என்பதை ரசிகர்களே பார்த்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அவருக்கு கடந்த வருடங்களில் ஏற்பட்ட காயம் ஆரம்பத்தில் சாதாரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் சிகிச்சைக்கு பின் திரும்பி வந்த அவர் மீண்டும் காயமடைந்த பொழுதுதான், காயத்தின் வீரியம் புரிந்தது.

- Advertisement -

அதுவரையில் அறுவை சிகிச்சை தேவையில்லை என்று இருந்த இந்திய கிரிக்கெட் வாரியம், அதற்கு மேல் அவரை உடனடியாக நியூசிலாந்து அனுப்பி அறுவை சிகிச்சை செய்தது. மேலும் அவர் வருவதற்கு காலம் தாழ்த்திக் கொண்டே சென்றது. இதன் காரணமாக அவர் இதற்கு மேல் திரும்ப வர மாட்டார் என்று விளையாட்டு உலகத்தில் பேச்சுகள் வந்தது. மேலும் ரசிகர்கள் அவரை கேலி செய்து மீம்கள் போட்டார்கள்.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள பும்ரா கூறும் பொழுது “தொலைக்காட்சி விளையாட்டு தொகுப்பாளரான என் மனைவி விளையாட்டு துறையில்தான் இருக்கிறார். நான் இனி திரும்ப வரமாட்டேன் என்பதான பேச்சுகள் இருப்பதாக அவர் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.

ஆனால் நான் மீண்டும் திரும்பி வந்தேன். நான் விளையாட்டை விளையாடுவதை எவ்வளவு விரும்புகிறேன் என்று உணர்ந்தேன். நான் எதையும் துரத்திச் செல்லவில்லை. மேலும் நான் காயத்தில் இருந்து திரும்ப வந்த பொழுது எனக்கு நிறைய ஹெட் பேஸ் இருந்தது. எனவே நான் நேர்மறைகளை பார்த்து எனது ஆட்டத்தை அனுபவித்து விளையாட மட்டுமே முடிவு செய்து இயங்கிக் கொண்டிருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!