டி20 உலக கோப்பை அரை இறுதியில் இந்த நான்கு அணிகள் தான் மோதும் என்று தனது கணிப்பில் தெரிவித்திருக்கிறார் வாசிம் அக்ரம்.
டி20 உலக கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி துவங்குகிறது. இதற்காக இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடிவிட்டன. தனது முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
கடந்த 15 வருடங்களாக டி20 உலக கோப்பை இந்திய அணி வெல்லவில்லை. இம்முறை இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என இந்திய ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கேற்றவாறு இந்திய அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
பும்ரா இல்லாததால் இந்திய அணி பந்துவீச்சில் சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது. ஆனால் பேட்டிங்கில் எந்த அணியிலும் இல்லாதவர்களுக்கு உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி உட்பட உட்பட இந்த நான்கு அணிகள் தான் டி20 உலக கோப்பை அரை இறுதியில் மோதும் என தனது கணிப்பில் தெரிவித்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன வாசிம் அக்ரம்.
பாகிஸ்தான் அணி ஒரு சில தோல்விகளை சந்தித்து இருந்தாலும், மிகச்சிறந்த அணியாக இருக்கிறது. அதேபோல் இந்தியா உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் அப்புறமாக செயல்படுவர். சொந்த மைதானத்தை சாதகமாகக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா அணி. அவர்களையும் குறைத்து மதிப்பிட இயலாது.
இதற்கிடையில் தென் ஆப்பிரிக்கா அணி, இங்கிலாந்து அணிகள் இருக்கின்றன. ஆனால் என்னை பொருத்தவரை தென் ஆப்பிரிக்க அணி மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். எனது கணிப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா/இங்கிலாந்து இரண்டில் ஓரு அணி என இந்த 4 அணிகள் தான் நிச்சயம் அரையறுதி போட்டியில் மோதும்.” என்றார்.