ஐபிஎல் வரலாற்றில் 6வது முறை.. உலக டி20 தொடர்களில் சாதனை.. பஞ்சாப் அணியை விளாசியது கொல்கத்தா அணி

0
208
KKR

இன்று 17ஆவது ஐபிஎல் சீசனில் 42வது போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன் மற்றும் பில் சால்ட் இருவரும் வந்தார்கள். இந்த ஜோடி ஆரம்பத்தில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்புகளை பஞ்சாப் வீரர்கள் தவற விட்டார்கள்.

- Advertisement -

இந்த வாய்ப்பை பயன்படுத்தி விளையாடிய கொல்கத்தா துவக்க ஜோடி அதிரடியில் மிரட்டியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவருமே அரை சதம் கடந்தார்கள். இறுதியில் இந்த ஜோடி 10.2 ஓவரில் 63 பந்துகளுக்கு 138 ரன்கள் சேர்த்தது. சுனில் நரைன் 32 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் இத்துடன் 357 ரன்கள் எடுத்து, அதிக ரன் எடுத்தவர்களுக்கான பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இன்னும் ஒரு துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்தார். முன்கூட்டியே அனுப்பப்பட்ட அதிரடி வீரர் ரசல் தலா 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் 10 பந்துகளில் 28 ரன்கள், ரிங்கு சிங் 4 பந்தில் 5 ரன், வெங்கடேஷ் ஐயர் 39 (22), ரமன்தீப் சிங் 6*(3) ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தரப்பில் பந்துவீச்சில் அர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலியால் சிவம் துபே ரிங்கு சிங்குக்கு பிரச்சனை.. இங்க பெரிய சவாலே இதுதான் – இர்பான் பதான் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 260 ரன்களை தாண்டி ஹைதராபாத் மூன்று முறையும், தற்போது கொல்கத்தா இரண்டு முறையும், ஆர்சிபி ஒரு முறையும் அடித்திருக்கின்றன, ஒரு டி20 தொடரில் ஆறு முறை 260 ரன்கள் தாண்டப்படுவது, உலக அளவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.