“பைனலுக்கு இந்த 2 டீம் வரும்.. இந்த டீம் உலக கோப்பை ஜெயிக்கும்!” – ஜேம்ஸ் ஆண்டர்சன் நேரடியான பதில்!

0
796
Anderson

கிரிக்கெட் உலகில் மிகவும் ஆச்சரியமான வீரர்களில் மிக முக்கியமானவர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

41 வயதில் இன்னும் ஒரு வேகப்பந்துவீச்சாளராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு விளையாடி வருகிறார். வேகப்பந்துவீச்சாளராக இந்த வயதில் நீடிப்பது என்பது அரிதான விஷயம்.

- Advertisement -

இவருடைய காலத்தில் அறிமுகமான நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கலம் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். அதே அணியில் ஆண்டர்சன் வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார் என்பது நம்ப முடியாத ஒரு விஷயம்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சில காலத்திற்கு முன்பாகவே இங்கிலாந்தில் அணிக்காக விளையாடுவது குறைந்து பிறகு நிறுத்திவிட்டார். அவருடைய முக்கியமான இலக்காக டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே இருந்து வருகிறது.

இவருடைய பந்துவீச்சில் ஸ்விங் என்பது இவருக்கு கைவந்த கலை. அதில் இவர் செய்யாத முயற்சிகளை கிடையாது. புதிதாக வந்த வாபுல் சீம் வரை ஸ்விங்கில் கலந்து பயன்படுத்தக்கூடிய பந்துவீச்சாளர். மேலும் ஸ்விங்கை கட்டுப்படுத்துவதில் வல்லவர்.

- Advertisement -

தற்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அணியாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி இருந்து வரும் நிலையில், இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்? என்கின்ற தன்னுடைய கணிப்பை கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“செமி பைனலுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் வரும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா மிகச் சிறப்பாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் திரும்பி வந்தது. அவர்களுக்கு பேட்டிங் நன்றாக உள்ளது மேலும் பந்துவீச்சிலும் வலிமை உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் செமி பைனலுக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஆனாலும் தவறவிடுவார்கள். இறுதிப் போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து அணிகள் வரும். மிக நெருக்கமாக அமையும் அந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று கூறியிருக்கிறார்!