பொல்லார்ட் மாதிரி ஒருத்தன் தான் வரமுடியும்! டிம் டேவிட் அடுத்த பொல்லார்ட்டா? எனும் கேள்விக்கு பதில் கொடுத்த கீரன் பொல்லார்ட்!

0
533

மும்பை இந்தியன்ஸ் அணிகள் இனி இன்னொரு பொல்லார்ட் வரவே முடியாது என்று பதில் கூறியுள்ளார் கீரன் பொல்லார்ட்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாற்றில் தலைசிறந்த வீரர்களுள் ஒருவராக கட்டாயம் இருக்கக்கூடியவர் கீரன் பொல்லார்ட். 2010ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எடுக்கப்பட்டவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வரை முன்னணி பினிஷர் ஆக விளையாடினார்.

- Advertisement -

கடந்த சீசன் முடிந்த பிறகு அணியில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார். வேறு எந்த அணிக்கும் விளையாட விருப்பம் இல்லை என்று கூறி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்த பொல்லார்ட்டை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். அந்த அளவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

பெஸ்ட் பினிஷராக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செயல்பட்டு வந்த பொல்லார்ட் போன்ற வீரர் இல்லாத இடத்தை யார் நிரப்புவார்? என்கிற பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்த நிலையில், டிம் டேவிட் அதற்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். இந்த சீசனில் ஓரிரு போட்டிகள் பினிஷ் செய்தபோது, இவர் தான் அடுத்த பொல்லார்ட்! என்று பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியின் போது வர்ணனையாளர்கள் கீரன் பொல்லார்ட் இடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு டக் அவுட்டில் நின்றபடி பொல்லார்ட் பதில் கொடுத்தார்.

- Advertisement -

அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டிருக்கும் டிம் டேவிட் பொல்லார்ட் இடத்தை நிரப்புவரா? அவர் தான் அடுத்த பொல்லார்ட்டா? என்கிற கேள்விகளையும் பொல்லார்ட் முன்னே வைத்தனர். இந்த கேள்விக்கு பதில் கொடுத்த பொல்லார்ட் கூறியதாவது:

“மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு பொல்லார்ட் மட்டுமே இருக்க முடியும். டிம் டேவிட் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டிம் டேவிட் ஆகவே இருப்பார். அவரது ஆட்டத்தை ஆடுவது தான் சரியாக இருக்கும். அணிக்கும் அதுதான் தேவை. ஏன் இன்னொருத்தர் போல ஆடவேண்டும்?” என்று சிரித்தபடியே பதில் கூறினார்.