“அந்த ஒரு விஷயத்தில் தான் கொஞ்சம் தயக்கம் இருந்தது, இனி வரும் போட்டிகளில் அந்த தயக்கம் இருக்காது” – ஆட்டநாயகன் மார்க் வுட்டின் அசத்தலான பேட்டி!

0
94

16வது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின்  மூன்றாவது போட்டி இன்று உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி மற்றும் லக்னா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய லக்னோ அணி  20 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆரம்பிக்கட்டுகளை இழந்தது.

அந்த அணியின் துவக்க வீரர் கெயில் மேயர்ஸ் சிறப்பாக ஆடி 36 பந்துகளில் 73 ரண்களை எடுத்தார். இவரது அதிரடியினால் லக்னோ அணி  பெரிய இலக்கை எட்ட முடிந்தது. டெல்லி அணியின் பந்துவீச்சில் கலீல் அகமது இரண்டு விக்கெட்களையும் சேத்தன் சக்காரியா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

- Advertisement -

194 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தி ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்களுக்கு 9  விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டெல்லி அணியில் அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

லக்னோ அணியில் மார்க் வுட் சிறப்பாக பந்துவீசி 14 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஆவேஸ் கான் 2 விக்கெட்டுகளையும் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய்  இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் தனது வெற்றி கணக்கை தொடங்கியது  லக்னோ அணி.

4 ஓவர்கள் பந்துவீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய  மார்க் வுட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்டநாயகன் விருதினை பெற்ற பின் பேட்டியளித்த அவர் “கடந்த முறை சிஎஸ்கே அணிக்காக ஆடும் போது  என்னால் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியவில்லை. இந்த முறை நிச்சயமாக என்னுடைய பந்து வீச்சின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்  என்று நினைத்திருந்தேன். அது முதல் போட்டியிலேயே நடந்ததில் மகிழ்ச்சி . பனிப்பொழிவின் காரணமாக லண்டிங் ஏரியாவில் சிறிது பிரச்சனை இருந்தது . இன்று என்னுடைய ரிதம் நன்றாக இருந்ததால் விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அணியின் கேப்டன் ராகுல் எனக்கான திட்டங்களை மிகவும் எளிமையாக வகுத்திருந்தார்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நாங்கள் இந்த மைதானத்தில் தான்  பயிற்சியில் ஈடுபட்டோம். அதனால் பனிப்பொழிவு நிச்சயமாக வரும் என்று எங்களுக்கு தெரியும். அதற்கேற்றார் போல் எங்களை தயார்படுத்திக் கொண்டோம். பனிப்பொழிவின் காரணமாக என்னுடைய ரன் அப்பை  குறைந்த அளவிலேயே வைத்திருந்தேன். பனிப்பொழிவின் காரணமாக  ஸ்லிப் ஆகிவிடுமோ என்ற தயக்கம் இருந்தது.. இனி வரும் போட்டிகளில் அப்படி இருக்காது என்று  தனது பேட்டியை முடித்துக் கொண்டார் மார்க் வுட்.