“ஆந்திர கிரிக்கெட்டில் அரசியல்தான் இருக்கிறது.. இனி நான் விளையாட மாட்டேன்” – ஹனுமா விகாரி அறிவிப்பு

0
276
Vihari

தற்பொழுது ஆந்திர மாநில கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் இந்திய வீரர் ஹனுமான் விகாரி இனி ஆந்திர மாநில அணிக்காக கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.

இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் உடன் 839 ரன்கள் அவர் எடுத்திருக்கிறார். மாறிவரும் கிரிக்கெட் சூழலில் அவருக்கான நிரந்தர இடம் இந்திய அணியில் கிடைக்கவில்லை.

- Advertisement -

மேலும் இந்த முறையும் ஆந்திர அணியை கால் இறுதி சுற்றுக்கு ரஞ்சி போட்டிக்கு அழைத்து வந்து, போட்டியில் வெற்றி பெற முடியாமல் தொடரில் இருந்து ஆந்திர அணி வெளியேறி இருக்கிறது.

இப்படியான நிலையில் இனி ஆந்திர அணிக்கு தான் தொடர்ந்து விளையாட விரும்பவில்லை என்றும், ஆந்திர கிரிக்கெட்டில் அரசியல்தான் பெரிய பங்கை வகிக்கிறது என்றும், தன்னால் சுயமரியாதையை இழந்து இருக்க முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து ஹனுமா விகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ரஞ்சி கோப்பை இந்த சீசனில் நாங்கள் கடுமையாக போராடினோம். ஆனால் எங்களால் கால்இறுதிப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. இந்தப் பதிவை சில உண்மைகளை வெளியிடுவதற்காக நான் பதிவு செய்கிறேன்.

- Advertisement -

பெங்கால் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நான் கேப்டனாக இருந்தேன். அப்பொழுது அணியில் இருந்த 17ஆவது வீரர் ஒருவரை நான் சத்தமிட்டேன். அந்த வீரர் தன்னுடைய அரசியல்வாதி தந்தையிடம் என்னைப் பற்றி புகார் செய்தார். அவர் தந்தை என் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஆந்திர கிரிக்கெட் சங்கத்திடம் கூறியிருக்கிறார்.

நான் தனிப்பட்ட முறையில் அவரை திட்டவில்லை. மேலும் கடந்த ஆண்டுகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஒரு இடதுகை வீரரை விட, இவர்தான் முக்கியம் என்று ஆந்திர கிரிக்கெட் நிர்வாகம் விரும்பியது.

கடந்த ஏழு ஆண்டுகளில் ஐந்து முறை ஆந்திர கிரிக்கெட் அணியை என் தலைமையில் நாக் அவுட் சுற்றுக்கு கொண்டு சென்று இருக்கிறேன். மேலும் நான் 16 போட்டிகள் இந்திய அணிக்காக விளையாடுகிறேன். ஆனால் நாங்கள் பிரதானமாக ஆந்திர கிரிக்கெட் நிர்வாகத்திற்கு தெரியவில்லை.

இதனால் நான் மிகவும் சங்கட்டமடைந்தேன். ஆனாலும் இந்த சீசனில் அணிக்காக விளையாடியதற்கு காரணம், விளையாட்டையும் எனது அணியும் மதிக்கிறேன் என்பதால்தான்.

ஆனாலும் இதில் ஒரு சோகமான பகுதி என்னவென்றால், ஆந்திர கிரிக்கெட் நிர்வாகம் என்ன சொன்னாலும் அதை வீரர்கள் கேட்க வேண்டும் என நினைக்கிறது. ஏனென்றால் அவர்களால்தான் வீரர்கள் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். நான் அவமானகரமாகவும், வெட்கமாகவும் இதை உணர்ந்தேன். ஆனாலும் இத்தனை நாள் இதை நான் வெளிப்படுத்தாமல் இருந்தேன்.

இதையும் படிங்க : இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி.. WTC புள்ளி பட்டியலில் இந்திய அணி அபாரம்.. ஆஸிக்கு பரிதாபம்

எனவே என் சுயமரியாதையை இழந்து நான் இனி ஆந்திர கிரிக்கெட் அணிக்காக விளையாடப் போவதில்லை என முடிவு செய்திருக்கிறேன். ஒவ்வொரு சீசனிலும் எங்கள் அணி வளரும் விதம் எனக்கு பிடிக்கும். ஆனால் ஆந்திர கிரிக்கெட் நிர்வாகம் அணி வளர்வதை விரும்பவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.