“டி20-ல் சூரிய குமார அவுட் பண்ண ஒரே வழிதான் இருக்கு.. இத மட்டும் பண்ணுங்க!” – ஜாகீர் கான் கொடுத்த ஐடியா!

0
315
Zaheer

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள், அந்த நாட்டில் மோதிக்கொண்ட மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்பொழுது ஒன்றுக்கு ஒன்று என சமனில் முடிந்திருக்கிறது.

நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பாக விளையாடி 56 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 201 ரன்கள் எடுத்தது. கில் மற்றும் திலக் இருவரும் உடனுக்குடன் ஆட்டம் இழந்து வெளியேறியதும் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் சூரியகுமார் யாதவ் ஜோடி 70 பந்துகளில் 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

ஜெய்ஸ்வால் 41 பந்தில் 60 ரன்கள் எடுக்க, சூரியகுமார் யாதவ் கடைசி ஓவர் வரை நின்று 55 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 100 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அவரை கட்டுப்படுத்த தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்களுக்கு வழியே தெரியவில்லை. மேலும் அவருக்கு இது நான்காவது சர்வதேச டி20 சதமாக அமைந்தது.

சூரியகுமார் யாதவை ஆட்டம் இழக்க வைப்பது எப்படி என்று புகழ்ச்சியாக பேசிய ஜாகிர் கான் கூறும் பொழுது “சூரியகுமார் தனக்கென ஒரு பெயரைக் கட்டி எழுப்புகிறார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவர் மைதானம் முழுவதிலும் ஷாட்கள் வைத்திருக்கிறார்.இதுதான் பந்துவீச்சாளர்களை மிகவும் கஷ்டப்பட வைக்கிறது. களக் கட்டுப்பாட்டு விதிகளை வைத்து ஒரு பந்துவீச்சாளர் பேட்ஸ்மேனை சில இடங்களில் கட்டுப்படுத்த முடியும்.

- Advertisement -

ஆனால் இந்த இடத்தில்தான் சூர்யா போன்ற ஒரு பேட்ஸ்மேன் உங்களிடம் இருந்தால், அவரால் லாங் ஆன் மற்றும் விக்கெட்டில் சிக்ஸ் அடிக்க முடியும். மேலும் கவருக்கு மேல் தூக்கி அடிக்க முடியும். இது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான ஒன்று. அவர் குறிப்பிட்ட பீல்டர்களையும், இடங்களையும் தேர்வு செய்து, அவருடைய ஜோனுக்குள் சென்ற பின்பு, அவரை தடுப்பது என்பது முடியாத காரியம்.

ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் சூரிய குமாருக்கு எதிராக பந்துவீசி விக்கெட்டை கைப்பற்றும் ஒரு வாய்ப்பை உங்களுக்கு வழங்கிக் கொள்கிறீர்கள். இதுதான் அவருக்கு எதிராக நீங்கள் செய்ய முடிந்த ஒன்று. நேற்று அதுதான் நடந்தது. மற்றபடி ஒன்றும் செய்ய முடியாது!” என்று கூறி இருக்கிறார்!