தல தோனி மனசு யாருக்கும் வராது.. ஹர்திக் பாண்டியா செயலால் கடுப்பான ரசிகர்கள்… கேப்டன் கூல் தோனியின் பழைய வீடியோ வைரல்.!

0
448

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையான மூன்றாவது ஒருநாள் போட்டி மேற்கிந்திய தீவுகளின் கயானா நாட்டிலுள்ள பிராவின்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி கேள்வி கேட்டு கேள்வி வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டி20 தொடரில் தனது வெற்றி கணக்கை துவங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது . இதனைத் தொடர்ந்து 160 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியா அணிக்கு ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகள் விழுந்து நெருக்கடி ஏற்பட்டாலும் அதன் பிறகு சிறப்பாக ஆடிய சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர் .

- Advertisement -

சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பாக விளையாடி 44 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருக்கு துணையாக நின்று ஆடிய இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா 37 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 49 ரண்களில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் .

இறுதி கட்டத்தில் வெற்றிக்காக இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து போட்டியை நிறைவு செய்தார் அப்போது மறுமுனையில் நின்ற இளம் வீரர் திலக் வர்மா 49 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஒருவர் மட்டும் எடுத்து இருந்தால் டி20 சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது அரை சதத்தை நிறைவு செய்திருப்பார்.

பொதுவாகவே கிரிக்கெட்டில் ஒரு வீரர் அவருக்கான மயில் கல்லை எட்டப் போகும் போது அணியின் மற்ற வீரர்கள் அவர்களுக்கு உறுதுணையாக நின்று ஆடுவார்கள். ஆனால் நேற்றைய போட்டியில் இளம் வீரர் திலக் வர்மா அரை சதம் எடுக்க ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டபோது கேப்டன் ஹர்திக் பாண்டியா 6 அடித்து போட்டியை முடித்தது ரசிகர்களிடம் சர்ச்சையையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது

- Advertisement -

இது தொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவு செய்திருக்கும் ரசிகர்கள் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை சுயநலமான வீரர் என விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு இளம் வீரர் அவருடைய அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போது அவருக்கு உறுதுணையாக ஆடாமல் சுயநலமாக சிக்சர் அடித்து போட்டியை முடிக்க வேண்டியதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பியிருக்கின்றனர் .

மேலும் இது தொடர்பாக மகேந்திர சிங் தோனியை நினைவு கூர்ந்து இருக்கும் ரசிகர்கள் தோனியை போன்ற ஒரு மனசு எந்த கேப்டனுக்கும் வராது என்று தெரிவித்திருக்கும் ரசிகர்கள் 2014 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் வெற்றி தங்களை விராட் கோலி எடுக்க வேண்டும் என்பதற்காக தனக்கு கிடைத்த வாய்ப்பை தோனி தட்டி கழித்ததை நினைவுகூர்ந்து உள்ளனர்.