என்னை மட்டும் சூப்பர் ஸ்டார் ஆக்காதீங்க; பேட்டிங்கில் க்ருனால், டெத் ஓவரில் மோசின் கான் எல்லாரும் தான்; இது டீம் வெற்றி – ஆட்டநாயகன் ஸ்டாய்னிஸ் பேட்டி!

0
590

எங்கள் அணியில் ஒருத்தர் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை. மோசின் கான், க்ருனால் பாண்டியா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டார்கள். இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி என்றார் ஆட்டநாயகன் ஸ்டாய்னிஸ்.

லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. ஸ்டாய்னிஸ் 89 ரன்கள், க்ருனால் பாண்டியா 49 ரன்கள் அடித்தனர்.

- Advertisement -

178 ரன்கள் இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் சேர்ந்து 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் முதல் விக்கெட்டிற்கு அமைத்தனர். அதன் பின்னர் வந்தவர்கள் எவரும் நிலைத்து நிற்கவில்லை. சூரியகுமார் யாதவ்(7), விஷ்ணு வினோத்(2) மற்றும் நேஹல் வதேரா(16) ஆகியோர் சொற்பரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழக்க மும்பை அணி தடுமாற்றம் கண்டது.

கடைசியில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடினாலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வெற்றி பெறும் அளவிற்கு ஃபினிஷ் செய்யவில்லை. ஆகையால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 7 பந்துகளில் 89 ரன்கள் அடித்து லக்னோ அணி 177 ரன்கள் எட்டுவதற்கு முக்கிய பங்காற்றிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். அப்போது பேசிய ஸ்டாய்னிஸ் கூறுகையில்,

- Advertisement -

“மிகச் சிறந்த தருணம் இது. மோசின் கான் கடந்த ஓராண்டாக போதிய கிரிக்கெட் விளையாடவில்லை. அவருக்கு இது மிகப் பெரிய தருணமாக இருக்கும். குறிப்பாக டெத் ஓவரில் பந்து வீசுவது அவ்வளவு எளிதல்ல. மிகமிக நெருக்கமான தருணத்தில் ஆட்டம் எங்களது பக்கம் வந்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.

நடுவில் ஸ்பின்னர்கள் சில சிறப்பான ஓவர்களை வீசினார்கள். கடைசியில் மோசின் கான் ஆட்டத்தை மொத்தமாக முடித்துக் கொடுத்துவிட்டார். எங்களது அணியில் தனிப்பட்ட சூப்பர் ஸ்டார் எவரும் இல்லை. இந்த வெற்றி ஒட்டுமொத்த அணியாக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு கிடைத்த வெற்றி. க்ருனால் பாண்டியா பேட்டிங்கில் பக்கபலமாக இருந்தார். மோசின் பவுலிங்கில் கலக்கினார். இதெப்படி தனிப்பட்ட வெற்றியாகும்.

க்ருனால் பாண்டியா கேப்டனாக நின்று வழிநடத்துவது மற்றும் பயிற்சியாளர் ஆண்டி ப்லவர் இருவரும் இணைந்து செயல்படுவது சிறப்பாகவே இருக்கிறது. போட்டி பற்றிய சிறந்த உணர்வு கொண்டவர்கள்.” என்றும் பேசினார்.