“ஹெல்மெட் பிரச்சனை கிடையாது.. அதுக்கு முன்ன ஒன்னு நடந்தது.. மேத்திவ்ஸ் அவுட்டுக்கு அதுவே காரணம்” – உண்மையை உடைத்த நடுவர்!

0
94198
Mathews

இன்று சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் முதல் முறையாக டைம் அவுட் என்கின்ற காரணத்திற்காக ஆட்டம் இழந்த வினோதம் நடைபெற்றிருக்கிறது.

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்ட போட்டியின் போது, இலங்கை அணியின் ஆஞ்சலோ மேத்யூஸ் இந்த முறையில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இலங்கை அணியின் சதீரா ஆட்டம் இழந்த பிறகு உள்ளே வந்த மேத்யூஸ் பந்தை எதிர்கொள்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். இந்த இடத்தில் இருந்துதான் பிரச்சனைகள் உருவானது.

பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் விளையாட உள்ளே வந்தால் அடுத்த மூன்று நிமிடத்திற்குள் முதல் பந்தை சந்திக்க தயாராகி விட வேண்டும். இந்த விதியில் உலக கோப்பைக்கு மூன்று நிமிடத்தில் இருந்து இரண்டு நிமிடம் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் உள்ளே வந்த மேத்திவ்ஸ் முதல் பந்தை எதிர்கொள்ள இரண்டு நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார். அவர் விளையாட சென்ற பொழுது, அவருடைய ஹெல்மெட்டின் உள்பட்டை சரியாக இல்லை. எனவே முதல் பந்தை சந்திக்காமல் ஹெல்மெட் கேட்டார். இந்த நேரத்தில் பங்களாதேஷ் கேப்டன் ஷாகிப் இதை நடுவர்களிடம் தெரிவித்து அவுட் கேட்க நடுவர்கள் அவுட்கொடுத்தார்கள்.

- Advertisement -

தற்பொழுது ஹெல்மெட் கேட்டது மட்டுமே நேர விரயம் செய்ததில் பிரச்சனை இல்லை. இதற்குள் வேறு ஒரு விஷயம் இருக்கிறது என்று போட்டியின் நான்காவது நடுவர் ஹோல்ஸ்டாக் உண்மையை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஒரு பேட்ஸ்மேன் உள்ளே வந்து இரண்டு நிமிடத்திற்குள் முதல் பந்தை சந்திப்பதற்கு தயாராக வேண்டும். அப்படி அவர் தயாராகவில்லை என்றால் எங்களுக்கு அது குறித்து தொலைக்காட்சி நடுவரிடம் இருந்து செய்தி வரும். இன்றும் அப்படியான செய்திதான் களத்திற்கு அனுப்பப்பட்டது.

உண்மையில் என்ன நடந்தது என்றால், அவர்கள் ஹெல்மெட் கேட்பதற்கு முன்பாகவே களத்திற்குள் இரண்டு நிமிடத்திற்கு மேல் செலவு செய்து விட்டார். அதன் பிறகு மீண்டும் விளையாடுவதற்கு தயாராகி ஹெல்மட்டை சரி செய்யும் போகும் பொழுது, மீண்டும் நேரம் விரயமானது. அப்பொழுதுதான் பங்களாதேஷ் தரப்பிலிருந்து முறையீடு செய்யப்பட்டது.

நாங்கள் இது குறித்து களத்தில் இருக்கும் நடுவர்களுக்கு ஆராய்ந்து செய்தி அனுப்பினோம். அவர் ஹெல்மெட் மாற்றுவதற்கு முன்பாகவே இரண்டு நிமிடங்களைக் களத்தில் செலவு செய்ததை கூறினோம். எனவே இந்த காரணத்தினாலே அவர் ஆட்டம் இழந்தவராக அறிவிக்கப்பட்டார்!” என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்!