உலக கோப்பை இந்திய அணியில் இடமில்லை.. இங்கிலாந்துக்கு செல்ல அதிரடி முடிவெடுத்த வீரர்.. வெளியான முக்கிய தகவல்!

0
8811
Chahal

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் வந்தாலே ஒவ்வொரு பெரிய அணியிலும் எதிர்பார்த்த பல பெயர்கள் காணாமல் போகும். பல வீரர்கள் மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளார்கள். உலக கிரிக்கெட்டில் இது என்றுமே தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக இருந்து வருகிறது!

இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் தொடங்கி நவம்பர் வரையில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. எனவே இந்திய அணி எப்படி அமையும் என்பதில், பலரும் சுழற் பந்துவீச்சாளர்கள் குறித்து பல நம்பிக்கைகள் வைத்திருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணி குறித்து பெரிய ஆச்சரியம் ஏற்படவில்லை. ஏனென்றால் ஆசியக் கோப்பைக் அறிவிக்கப்பட்ட அணியில் இருந்துதான் வீரர்கள் வருவார்கள் என்பதால் பெரிய ஆச்சரியம் இருக்கவில்லை.

ஆனாலும் கூட இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறுகின்ற காரணத்தினால் இந்திய நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சாகல் இருவரில் ஒருவராவது அணியில் கடைசி நேரத்தில் இடம் பெறுவார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அப்படியான முடிவுகளுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் உலகக் கோப்பை இந்திய அணிகள் இடம்பெறாத இந்திய மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் சாகல் அதிரடியாக இங்கிலாந்து சென்று கவுண்ட்டி கிரிக்கெட்டில் கென்ட் அனிக்காக விளையாட இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஒருவேளை குல்திப் யாதவ் காயம் என்றால் நடுவில் அழைக்கும் பொழுது சாகல் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அவர் அதிரடியாக முடிவு எடுத்து இங்கிலாந்து செல்ல திட்டமிட்டு இருக்கிறார் என்பது ஆச்சரியமானது.

- Advertisement -

இதுகுறித்து கவுண்டி கென்ட் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“கென்ட் கிளப் கிரிக்கெட் நிர்வாகம் இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வமான அறிக்கையை விரைவில் வழங்கும். சாகல் மொத்தம் மூன்று நான்கு நாட்கள் கொண்ட போட்டியில் இங்கு விளையாடுவார். இங்கு வந்து விளையாடுவதற்காக பிசிசிஐ அவருக்கு என்ஓசி வழங்கி உள்ளது. மேலும் அவர் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் உடனே அவர் அனுப்பி வைக்கவும்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது.

சாகல் இது குறித்து கூறும் பொழுது
“இயற்கையாகவே இந்திய அணியில் எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் இடம்பெற முடியாமல் போவது ஏமாற்றம் அளிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரராக எல்லா நேரத்திலும் எல்லா விஷயங்களும் நமக்கு சரியாகவே செல்லாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். எனது செயல் திறன் இந்தியாவுக்காக என்னை தேர்வு செய்ய வைக்க வேண்டும்.

ராகுல் டிராவிட் சார் எப்பொழுதும் கவுண்ட் கிரிக்கெட்டில் தான் விளையாடிய நேரங்களை மிகவும் உயர்வாக பேசுவார். நான் உள்ளூர் கிரிக்கெட்டில்தான் விளையாட விரும்பினேன். ஆனால் இந்த வாய்ப்புக்கு இவ்வளவு குறுகிய காலத்தில், எனக்கு உதவியை என் நல்ல நண்பர் பிரின்டனுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இதை எவ்வளவு என்று விளக்குவது கடினம்!” என்று கூறியிருக்கிறார்!