“பாக் கிடையாது.. உலக கோப்பை இந்தியாவுக்கு.. அவங்க பக்கத்துல கூட யாரும் இல்ல!” – சல்மான் பட் பயமற்ற பேச்சு!

0
5123
Butt

இந்தியாவில் நடக்க இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான எதிர்பார்ப்பு, உலகக்கோப்பை துவங்குவதற்கான நாள் நெருங்க நெருங்க உச்சகட்டத்தை அடைந்து வருகிறது!

உலகக் கோப்பை குறித்தான எதிர்பார்ப்புகள் எப்படி உச்சகட்டத்தை எட்டி வருகிறதோ, அதேபோல இந்திய அணி உலகக்கோப்பை நெருங்க நெருங்க செயல்பாட்டில் உச்சநிலையை எட்டி வருகிறது.

- Advertisement -

எந்த ஒரு உலகக்கோப்பைக்கும் முன்பாக இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இவ்வளவு சிறப்பான ஒரு அணியாக இருந்தது கிடையாது. மிகக் குறிப்பாக பந்துவீச்சில் இந்திய அணி தற்பொழுது உச்ச நிலையில் இருக்கிறது.

இதன் காரணமாக நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்கின்ற கருத்து நாளுக்கு நாள் பல முன்னாள் வீரர்களிடம் வலுப்பட்டு கொண்டே வருகிறது. ஆரம்பத்தில் இந்திய அணி மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, தற்பொழுது இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

இந்த வகையில் இதுகுறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் “இந்தியா மட்டுமே உலக கிரிக்கெட்டில் இந்த அளவுக்கு உச்சநிலையை எட்டி இருக்கிறது. அனைவரும் உலகக்கோப்பையில் முதல் நான்கு அணிகள் பற்றி பேசுகிறார்கள். ஆனால் இந்தியாவை வீழ்த்தக்கூடிய அணிதான் உலகக்கோப்பையை வெல்ல முடியும்.

- Advertisement -

இந்தியா சிறந்த அணி. அவர்களின் பேட்டிங் முழுமையாக உள்ளது. மேலும் அவர்களின் பந்து வீச்சு இந்த நிலைமைகளுக்கு மிகவும் பொருத்தமானது. அவர்களே தவறு செய்தால் தவிர, அவர்கள் அருகில் எந்த அணியும் கிடையாது.

கடந்த ஆண்டுகளில் இந்தியா கணிசமாக மேம்பட்டு இருக்கிறது. இந்திய வீரர்களின் உடல் தகுதி 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்பொழுது சிறப்பாக இருக்கிறது.

அதே போல் பீல்டிங் தரங்களும் மேம்பட்டு உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான உள்கட்டமைப்பு மற்றும் வர்ணனையாளர்கள், நிபுணர்கள், கிரிக்கெட் உபகரணங்கள் வரை, கிரிக்கெட் தொடர்புடைய அனைத்திலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது!

டி20 லீக்குகளின் எழுச்சிக்கு மத்தியில், கிரிக்கெட்டில் முன்னேற்றம் கண்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே. டி20 கிரிக்கெட்டுக்கு வரும் பிரபலத்தால் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இருந்தாலும் இதை எல்லாம் மீறி, இந்தியா தான் அனைத்து வடிவங்களிலும் மிகச் சிறப்பான அணிகளைக் கொண்டிருக்கிறது. மறுபுறம் மற்ற அணிகளுக்கு கடுமையான சரிவு உண்டாகி இருக்கிறது. டி20 லீக்குகளின் காரணமாக மற்ற எல்லா அணிகளும் போராடி வருகின்றன!” என்று கூறி இருக்கிறார்!