“ரோகித் முகமது சமியை விளையாட வைக்க தேவையில்லை.. காரணம் இதுதான்..!” – முகமது கைஃப் வெளியிட்ட அதிரடியான கருத்து!

0
1211
Kaif

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் பேட்டிங் யூனிட்டா? இல்லை பவுலிங் யூனிட்டா? என்று பார்க்கும் பொழுது, பேட்டிங் யூனிட்டை விட பவுலிங் யூனிட் பலமாக இருப்பதே முக்கிய காரணமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த உலகக்கோப்பை தொடரை எடுத்துக் கொண்டால் இந்திய பவுலிங் யூனிட் ஒவ்வொரு அணியையும், விளையாடும் ஆடுகளத்திற்கு தேவையான ரன்களை அடிக்க விடுவதே கிடையாது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் 200 ரன்களை தொடவில்லை. டெல்லி மாதிரியான சிறிய மைதானத்தில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தானை 270 ரன்களுக்கு வைத்தது. இதற்கு அடுத்து 320 ரன்கள் நோக்கி சென்ற நியூசிலாந்து அணியை 280 ரன்களில் நிறுத்தியது. இதேதான் பேட்டிங் செய்ய சாதகமான புனே மைதானத்தில் பங்களாதேஷுக்கும் நடந்தது.

நடந்து முடிந்துள்ள ஐந்து போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக எந்த அணியும் 300 ரன்கள் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்திய பேட்டி யூனிட் மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறது. அவர்களுக்கு பெரிதான ரன் அழுத்தம் ஏதுமில்லை.

- Advertisement -

குறிப்பாக வெள்ளைப்பந்தில் நீண்ட வடிவமான ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் டிக்கெட்டை கைப்பற்றுவதும் மிடில் ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் ரன் கொண்டு வருவதும்தான் ஒரு அணியின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

இந்திய பவுலிங் யூனிட் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறது. அதே சமயத்தில் இந்திய பேட்மேன்கள் மிடில் ஓவர்களில் ரன் அழுத்தம் இல்லாமல் விளையாட முடிகிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு வெற்றிகள் மிக எளிதாக வந்து கொண்டிருக்கிறது.

தற்பொழுது இந்திய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்துள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வந்த முகமது சமி ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார். எனவே அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்று வெளியில் இருந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு வித்தியாசமாக முகமது கைப் தற்பொழுது பேசியிருக்கிறார்.

இதுகுறித்து முகமது கைப் கூறும் பொழுது ” ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் வழக்கமான ஒரிஜினல் டெம்ப்ளேட் உடன் போட்டிகளுக்கு செல்ல வேண்டும். சமி விளையாடுவது அவர்களுடைய உலகக் கோப்பை திட்டத்தில் கிடையாது. ஹர்திக் பாண்டியாதான் திட்டத்தில் இருக்கக்கூடிய வீரர். எனவே அவர் திரும்பி வரும் பட்சத்தில் அவரே அணியில் சேர்க்கப்பட வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!