“கோலி சமி கிடையாது.. இந்த மூணு பிளேயர்தான் உலககோப்பைல இப்போ பெஸ்ட்!” – ரிக்கி பாண்டிங் வித்யாசமான தேர்வு!

0
5933
Virat

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகவும் உற்சாகமாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. பெரிய அளவில் மழை பாதிக்கும் என்று இருந்த நிலையில் அப்படி எதுவும் இல்லாதது இந்த உலகக் கோப்பை தொடரை வெற்றியடைய செய்திருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய வீரர்களில் பெரிய அளவில் செயல்படாமல் இருப்பது இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஆஸ்திரேலியாவின் மித் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் நால்வர் மட்டுமே.

- Advertisement -

மற்றபடி விராட் கோலி, ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், ஜஸ்பிரித் பும்ரா, கேன் வில்லியம்சன் என எல்லோருமே எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் சிறப்பாகவே செயல்பட்டு கொண்டு வருகிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் குயின்டன் டி காக் மற்றும் மார்க்கோ யான்சன் இருவரும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறார்கள். எதிர்பாராத வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவது உலகக் கோப்பை தொடரை மிகவும் சுவாரசியமான ஒன்றாக மாற்றி இருக்கிறது என்பது உண்மை.

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் சிறந்த மூன்று வீரர்களாக யார் இருப்பார்கள் என்பது குறித்து ரிக்கி பாண்டிங் தன்னுடைய கருத்தை முன் வைத்திருக்கிறார். அதில் தொடரை நடத்தும் இந்தியாவை சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது “தற்பொழுது உலகக்கோப்பையில் முன்னணி விக்கெட் வீழ்த்தியவராக இருக்கும் ஆடம் ஜாம்பாவை தாண்டி செல்வது மிகவும் கடினமான விஷயம். அவர் தனது முதல் இரண்டு ஆட்டங்களில் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை. அதே சமயத்தில் தற்பொழுது 18, 19 விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் இந்த உலகக் கோப்பை தொடரில் நான்கு சதங்கள் அடித்து முன்னணியில் இருக்கிறார். இதுவே அவரது கடைசி உலகக் கோப்பையாகவும் இருக்கலாம். அவர் மிகவும் வலிமையான தென்னாப்பிரிக்க படையை முன்னின்று வழிநடத்திச் சென்று இருப்பதால் அவரை தாண்டுவதும் கடினம்.

கடைசியாக நான் மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரரான மார்க்கோ யான்சன் இடம் செல்கிறேன். அவர் இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு புதிய பந்தில் விக்கெட்டை எடுத்து நல்ல துவக்கத்தை தரக்கூடியவராக இருந்து வந்திருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!