“கோலி ரோகித் கிடையாது.. டி20 உலக கோப்பையில் இவர்தான் எக்ஸ்-பேக்டர்” – சுரேஷ் ரெய்னா கணிப்பு!

0
140
Raina

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி இன்று பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் துவங்குகிறது.

இந்த போட்டிக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் திரும்பி இருக்கிறார்கள். மேலும் இசான் கிஷான் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் அழைக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, சாகல் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடாத அக்சர் படேல் அணிக்கு திரும்பியிருக்கிறார்.

இந்தத் தொடர் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி20 தொடர் ஆகும். மேலும் அடுத்த நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் t20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெறுவதற்கான சோதனைக்களமாகவே அமையும்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “விக்கெட் கீப்பிங் இடத்துக்கு நிறைய போட்டி இருக்கும் என்று நினைக்கிறேன். ரிஷப் பண்ட் குணமடைந்து விடுவார். கே எல் ராகுல் வருவார். தற்பொழுது சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருக்கிறார்கள். இவர்களோடு இசான் கிஷானும் போட்டியிடுவார். இந்த நிலை மிக முக்கியமானதாக மாறும்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சாம்சங் சதம் அடித்த பிறகு உங்களை அவரால் புறக்கணிக்க முடியாது. அவர் ஒரு அச்சமற்ற பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பராகவும் மேலும் கேப்டனாகவும் சிறப்பாக இருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அவர் சிறப்பாகவே செயல்பட்டு வந்திருக்கிறார்.

நிறைய விக்கெட் கீப்பர்கள் இருந்தாலும் நான் சஞ்சு சாம்சனை விரும்புகிறேன். ஏனென்றால் அவர் மிடில் ஓவர்களில் சில நல்ல பிக்கப் ஷாட்களை விளையாடுகிறார். இருந்தாலும் ஐபிஎல் தொடரின் செயல்பாடு டி20 உலகக்கோப்பை இந்திய அணியின் தேர்வுக்கு முக்கிய காரணியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் ஆப்கானிஸ்தான் தொடர் சாம்சனுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். அவர் இந்திய அணிக்கு ஒரு எக்ஸ் ஃபேக்டராக இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்!