“கீப்பரும் கிடையாது.. இப்ப கேப்டனும் கிடையாது.. இந்தியா விட்டு வந்துருங்க!” – கிளார்க் ஆஸி அணி மீது தாக்கு!

0
8952
Clarke

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் போட்டி அட்டவணைகள் மற்றும் தரம்சாலா மைதானம் போன்றவைகள் பிரச்சனைக்குரியதாக பேசப்பட்டது.

மேலும் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக் கோப்பையின் முதல் போட்டியில், ரசிகர்களின் வரவேற்பு குறைவாக இருந்தது ஒருபுறம் விமர்சனமானது.

- Advertisement -

ஆனால் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பைக்கு ஒரு சுறுசுறுப்பை நியூசிலாந்து அணி கொடுத்தது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணியை இந்தியா மிகவும் சாதாரண முறையில் வென்றது.

ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணி எப்படியும் மீண்டு வந்து விடும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தார்கள். வலுவான பேட்டிங் லைன் அப் இருந்தது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 300-க்கும் மேற்பட்ட ரன்களை கொடுத்து, திருப்பி 200 ரன்கள் கூட அடிக்காமல் ஆஸ்திரேலியா தோற்றது மிகவும் விமர்சனத்திற்குரிய ஒன்றாக மாறியது.

- Advertisement -

ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களே அடுத்த அணிகளை விட்டு தங்கள் அணி பற்றி பேச ஆரம்பித்தார்கள். மேத்யூ ஹைடன் ஆஸ்திரேலியா அணியின் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.

ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சு ஒருபுறம் சுமாராக இருந்த பொழுது, ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும் 200 ரன்களை கூட தாண்டவில்லை. மேலும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை இரண்டாவது ஆட்டத்தில் விளையாடவில்லை. இந்த சூழ்நிலையில் கேப்டனையும் மாற்ற வேண்டும் என்கின்ற பேச்சுகள் எழுந்தது.

தற்பொழுது இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசும் பொழுது ” அந்தப் போட்டிக்கு முன்னால் இரவு கம்மின்ஸ் அலெக்ஸ் கேரியை களம் இறக்க மாட்டார் என்று கேள்விப்பட்டேன். அவர் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர். அவருக்கு ஒரு போட்டி மட்டுமே தந்து அவர் வீழ்த்தப்பட்டு இருக்கிறார்.

இப்போது நாங்கள் எங்கள் கேப்டனையும் டிராப் செய்யப் போகிறோம் என்ற பேச்சுகள் வருகிறது. மேலும் அலெக்ஸ் கேரிக்கு ஒரே ஒரு ஆட்டம்தான் தரப்படும் என்றால், அவரை ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு கூட்டி சென்று இருக்கக் கூடாது. நீங்கள் கம்மின்சை கேப்டன் பதவியில் இருந்து இறக்குவீர்கள் என்றால் நீங்கள் தவறான கேப்டனை தேர்ந்தெடுத்திர்கள் என்று அர்த்தம்!” என்று கூறியிருக்கிறார்!