“கோலி கிடையாது.. WC-ல் இவர்தான் அதிக ரன் அடிப்பார்.. இவரே இனி சூப்பர் ஸ்டார்!” – ஏபி.டிவில்லியர்ஸ் அதிரடி கணிப்பு!

0
9392
Devilliers

இந்தியாவில் இன்னும் சில வாரத்தில் 13வது உலகக்கோப்பை தொடர் மிகவும் பிரம்மாண்டமாகத் துவங்கி நடைபெற இருக்கிறது. இது இந்தியா முழுமையாக நடத்தும் உலகக்கோப்பை தொடராக இருக்கும்.

தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது இந்திய அணி. முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதை வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

நாளை மறுநாள் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் இந்திய அணி உலகக்கோப்பைக்குள் செல்ல இருக்கிறது.

உலகக் கோப்பைக்கான இரண்டு பயிற்சி போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளை சந்தித்து விளையாடுகிறது. இதற்கு அடுத்து உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் சந்திக்கிறது.

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் யார் அதிக ரன்கள் குவிப்பார்கள் என்று கூறியுள்ள ஏபி.டிவில்லியர்ஸ் “நடக்க இருக்கும் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக சுப்மன் கில் இருப்பார். அவர் சிறந்த பார்மில் இருக்கிறார். நான் இந்த விஷயத்தில் எப்பொழுதும் மூன்றாவது வீரருடன் செல்லும் தவறான முடிவை எடுக்க மாட்டேன்.

- Advertisement -

சுப்மன் கில் அந்த அளவுக்கு சிறப்பான பார்மில் இருக்கிறார். அவரை கவனிக்காமல் விடுவது எனக்கு முட்டாள்தனமாகப்படும். அவர் சிறந்த வீரர் மற்றும் அற்புதமான நுணுக்கம் கொண்டவர். அவர் தனது சொந்த நாட்டில் விளையாடுகிறார். அழுத்தம் இருக்கும், ஆனாலும் அவர்தான் என்னுடைய தேர்வு.

அவருடைய டெக்னிக் மிகவும் எளிமையானது. பொதுவாக உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களிடம் இருப்பது. ஸ்மித் போன்ற வீரர்கள் இதில் விதிவிலக்கு. கில் பாரம்பரியமான நுட்பத்தை கொண்டவர். அவருடையது ஸ்ட்ரெயிட் பார்வேர்ட் டெக்னிக். அவர் அதிரடியில் கியர் மாற்றவும், புதிய முயற்சிகள் செய்யவும், பந்துவீச்சாளர்கள் மேல் அழுத்தம் செலுத்தவும் செய்ய முடியும்.

அவருக்கு பந்தின் லென்த்தை கணிக்கும் திறமை மிக அபாரமாக இருக்கிறது. இது உலகின் சிறந்த வீரர்களுக்கு இருக்கும் திறமை. உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக கில் வேகமாக மாறி வருகிறார். அவர் மிக இளமையாக இருக்கிறார். ஆனால் அவர் ஒரு அனுபவ பேட்ஸ்மேன் போல விளையாடுகிறார்!” என்று கூறியிருக்கிறார்!