“ரோகித் ஹர்திக் வித்தியாசம் கிடையாது.. எனக்கு அது நடந்தது துரதிஷ்டம்” – அக்சர் படேல் பேச்சு!

0
85
Axar

தற்பொழுது இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக உருவெடுத்து இருப்பவர் இடது கை சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.

மூன்று வடிவ கிரிக்கெட்டிலுமே கிரிக்கெட்டின் மூன்று துறைகளிலும் இவர் மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுக்கின்ற காரணத்தினால், இவர் இருக்கும் வரை குறிப்பிட்ட இடம் இவருக்கானதாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜா போலவே ஆன இடது கை சுழற் பந்துவீச்சு 29 வயதான ஆல் ரவுண்டர் அக்சர் படேலுக்கு இந்திய அணியில் முக்கியமான தொடர்களின் போது வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இடையில் இவருக்கு ஏற்பட்ட காயம் இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய இடைவெளியை உருவாக்கியது. இதனால் இவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

காயத்திற்கு பிறகு திரும்ப வந்த இவர் இந்தியாவுக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறிய இடைவெளிகளில் விளையாடிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அது ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுப்பதாக மட்டுமே அமைந்திருக்கிறது.

- Advertisement -

தற்போது இந்த சூழ்நிலைகள் பற்றி மனம் திறந்து பேசி உள்ள அக்சர் படேல்
“எனக்கு ஏற்பட்டது துரதிஷ்டவசமான ஒரு காயம். ஆனாலும் நான் காயமடைவது முதல் முறை கிடையாது. நான் காயத்தின் போது கிடைத்த ஓய்வு நேரத்தை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டேன். அப்போது எனது ஆட்டத்தை இன்னும் மேம்படுத்தலாம் என்று நினைத்தேன். இதன் காரணமாக நான் என்சிஏ-வில் இருந்த பொழுது எனது பந்துவீச்சில் வேலை செய்தேன்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெதுவாக பந்து வீசியதோடு, கிரீசை பயன்படுத்தியும் பந்து வீசினேன்.மேலும் எனது பந்துவீச்சில் நான் என்ன புதியதாக சேர்க்கலாம் என்று சிந்தித்தேன். பொதுவாக ஆப் ஸ்பின்னர்கள் மற்றும் லெக் ஸ்பின்னர்களுக்கு பந்துவீச்சில் சேர்ப்பதற்கு நிறைய வெரைட்டிகள் உண்டு. ஆனால் என் வகை பந்துவீச்சுக்கு அப்படி கிடையாது. இதன் காரணமாக நான் என்சிஏவில் என் பந்துவீச்சில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் கூடுதலாக எதையாவது சேர்க்க வேலை செய்கிறேன்.

கேப்டன்களாக ரோஹித் மற்றும் ஹர்திக் இருவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அவர்கள் எப்பொழுதுமே என்னுடைய திட்டத்தையே முதலில் செயல்படுத்த சொல்வார்கள். என்னுடைய பலம் எதுவென்று அவர்களுக்கு தெரியும்.

அவர்கள் என்னுடைய சொந்த முயற்சியில் செயல்படுவதற்கு அனுமதிக்கிறார்கள். ஒருவேளை அது அந்த இடத்தில் சரி வராமல் போனால் மட்டுமே, அவர்கள் தலையிடுவார்கள். அதனால் ஒரு வீரராக நான் கேப்டன்களான இந்த இருவரிடமும் எந்த பெரிய வித்தியாசத்தையும் பார்த்ததில்லை” என்று கூறி இருக்கிறார்.