“தோனி கிடையாது இப்ப உலக கிரிக்கெட்ல இவர்தான் மிஸ்டர் கூல்” – சேவாக் சுவாரசியமான ட்வீட்!

0
4492
Sehwag

இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் நடந்து வரும் ஆசஸ் கிரிக்கெட் தொடர் குறித்து சுவாரசியமான ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்!

உலகப் புகழ்பெற்ற ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த வாரத்தில் ஆரம்பித்து அதன் முதல் போட்டி மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து எட்டு விக்கெட்டுகளை இழந்து ஜோ ரூட் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து களத்தில் நிற்கும் பொழுது அதிரடியாக முதல் நாளிலேயே டிக்ளேர் செய்து மிரட்டியது.

இதற்கு அடுத்து திரும்பி வந்த ஆஸ்திரேலியா அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து இங்கிலாந்து ஸ்கோரை எட்ட உதவி செய்தார்.

இதற்கு அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக கட்டுப்படுத்த கடைசி இன்னிங்ஸில் இலக்காக 281 ரன்கள் வந்தது.

- Advertisement -

இதை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு மீண்டும் துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அரை சதம் அடித்து நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். பின்பு எட்டு விக்கெட்டுகள் போயிருக்க அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.

இதுகுறித்து பதிவு செய்துள்ள வீரேந்திர சேவாக் ” என்ன ஒரு டெஸ்ட் மேட்ச்! சமீபத்திய காலங்களில் நான் பார்த்த சிறந்த ஒரு மேட்ச். டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த கிரிக்கெட்.

குறிப்பாக வானிலையை கருத்தில் கொண்டு முதல் நாள் முடிவதற்கு சில நேரம் இருந்த பொழுது ஆட்டத்தை இங்கிலாந்து டிக்ளர் செய்தது மிகவும் தைரியமான முடிவாகும். ஆனால் கவாஜா மிகவும் சிறப்பாக விளையாடினார். அவருடன் கேப்டன் பேட் கம்மின்ஸ் புதிய மிஸ்டர்… ” என்று முடித்து அவரை புதிய மிஸ்டர் கூல் என்று மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!