“ஆண்டர்சன் பும்ரா கிடையாது.. இவர்தான் எல்லா காலத்துக்கும் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்” – மெக்ராத் தேர்வு!

0
400
Bumrah

கிரிக்கெட்டில் ஒரு கட்டத்தில் வேகப்பந்து வீச்சு என்பது வேகத்தைச் சார்ந்ததாகவும், துல்லியத்தை பெரிய அளவில் சாராததாகவும் இருந்து வந்தது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு என அவர்களின் வேகத்தின் காரணமாக தனி கவர்ச்சி கிரிக்கெட்டில் இருந்தது.

இவை எல்லாமே கிளன் மெக்ராத் எனும் பந்துவீச்சு இயந்திரம் கிரிக்கெட் உலகத்திற்குள் வருவதற்கு முன்பு மட்டுமே. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்குள் இவர் வந்த பிறகு உலக கிரிக்கெட்டில் வேகப் பந்துவீச்சு அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.

- Advertisement -

மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில், ஒரே லைன் மற்றும் லென்த்தில் அசராமல் சலிப்பில்லாமல் பந்து வீசி, பேட்ஸ்மேன்களை ரன் நெருக்கடிகளுக்கு கொண்டு வந்து, விக்கட்டுகளை கைப்பற்றுவதில் வல்லவராக இவர் விளங்கினார்.

இந்த முறையில் இவர் வெற்றிகரமாக வேகப்பந்து வீச்சுத் துறையில் விளங்கிய காரணத்தினால், இதற்குப் பின்பு வந்த பல பந்துவீச்சாளர்கள் இவருடைய பாணியை வேகப்பந்து வீச்சில் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.

குறிப்பாக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடியவர். ஆனால் பிற்காலத்தில் இவர் தன்னுடைய வேகத்தை 135 கிலோமீட்டர் குறைத்துக் கொண்டார். மேலும் நேராக வந்து மெக்ராத் போல பந்து வீசுவதை பாணியாக மாற்றியும் கொண்டார்.

- Advertisement -

இப்படி இவர் வருகைக்குப் பின்னால் கிரிக்கெட் உலகத்தில் இவருடைய பந்து வீச்சு தாக்கம் நிறைய இளம் வீரர்களிடம் சென்று சேர்ந்தது. நவீன டி20 கிரிக்கெட் காலத்தில் இவருடைய அணுகுமுறைதான் நிறைய வேகப்பந்துவீச்சாளர்களிடம் இருக்கிறது.

இந்த நிலையில் கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் யார் என்கின்ற கேள்விக்கு, மெக்ராத் தன் சக நாட்டு மூத்த வேகப்பந்துவீச்சாளரான டென்னிஸ் லில்லியை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “என்னுடைய ஹீரோ மற்றும் ஐடியல் எப்பொழுதும் டென்னிஸ் லில்லிதான். அவர்தான் கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்!” என்று கூறியிருக்கிறார்!