ஐபிஎல் தொடரில் முடிக்கப்படாத வேலை ஒன்று மிச்சமுள்ளது – லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அதிரடி

0
119
Sanjiv Goenka

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சில வாரங்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய ரசிகர்கள் அனைவரும் தற்பொழுது அடுத்து ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் அடுத்த வருடம் முதல் மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கெடுத்து விளையாடப் போகிறது. பிசிசிஐ நடத்திய ஏலத்தில் 2 புதிய அணிகள் நேற்று தேர்ந்தேடுக்கப் பட்டுள்ளது. அகமதாபாத் அணியை சிவிசி பார்ட்னர்ஸ் நிறுவனமும் லக்னோ அணியை ஆர் பி எஸ் ஜி நிறுவனமும் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

ஆர்பி சஞ்சீவ் கோயங்காவின் நிறுவனமான ஆர் பி எஸ் ஜி லக்னோ அணியை 7,090 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். மறுபக்கம் அகமதபத் அனெய் சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் 5600 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது

ஆர் பி சஞ்சீவ் கோயங்கா அதிரடி பேச்ச

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடம் பெறவில்லை. அந்த இரு ஆண்டுகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு மாற்று அணியாக குஜராத் மற்றும் புனே அணிகள் விளையாடியது நம் அனைவருக்கும் தெரிந்ததே. புனே அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா அதிக தொகைக்கு அப்பொழுது வாங்கியிருந்தார். அவருடைய அணி 2016 ஆம் ஆண்டு அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.

ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு மிக அற்புதமாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வி பெற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தற்பொழுது லக்னோ அணியை கைப்பற்றியவுடன், முடிக்கப்படாத வேலை உண்டு மிச்சம் உள்ளது என்று கூறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரு ரன் வித்தியாசத்தில் அப்போது எங்களது அணி தோற்றுவிட்டது.

- Advertisement -

இந்த நிகழ்வை மேற்கோள்காட்டி எங்களது புதிய அணிக்கு முடிக்கப்படாத ஒரு வேலை மிச்சம் உள்ளது என்று அதிரடியாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் புதிய வீரர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு சிறந்த அணியை கட்டமைப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

உத்திரப் பிரதேசத்தை தலைநகராகக் கொண்டு உள்ள லக்னோ அணி இனி அடுத்த ஆண்டு முதல் அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் அதனுடைய ஹோம் கிரவுண்ட் போட்டிகளை விளையாடும். மறுபக்கம் அகமதாபாத் அணி நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், அதனுடைய ஹோம் கிரவுண்ட் போட்டிகளை விளையாடும். இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரில் இணைக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு முதல் இனி நிறைய போட்டிகள் ஒவ்வொரு அணியும் விளையாடும். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் தற்போது இருக்கின்றனர்