“விராட் கோலிகுள்ள ஸ்விட்ச் இருக்கு.. அத அவர் தட்டினா போதும்” – அஸ்வின் சிறப்பு பேட்டி

0
52
Ashwin

விராட் கோலி ஏறக்குறைய ஒரு வருடங்கள் தாண்டி இந்திய டி20 அணிக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் அழைக்கப்பட்டார்.

இந்த தொடரின் முதல் போட்டியில் தனிப்பட்ட சில காரணங்களால் அவரால் விளையாட முடியவில்லை. இதற்கடுத்து இரண்டாவது போட்டியில் அவர் விளையாடினார்.

- Advertisement -

குறிப்பிட்ட அந்த போட்டியில் அவர் சந்தித்த முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாடும் நோக்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் பந்து சிக்ஸருக்கு செல்லாமல் பவுண்டரி ஆனபொழுது, களத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் எல்லைக்கோட்டை தாண்டி பந்தை காற்றில் அடிக்க விரும்பினார். 16 பந்தில் 5 பவுண்டர்களுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கடுத்து மூன்றாவது டி20 போட்டியில் ஒரு விக்கெட் விழுந்ததும் உள்ளே வந்த விராட் கோலி அதே அதிரடியை காட்டும் என்று முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். விராட் கோலி இந்த முறையில் விளையாடுவதை எப்பொழுதும் டி20 கிரிக்கெட்டில் பார்த்தது கிடையாது.

அவர் தன்னுடைய டி20 கிரிக்கெட் பேட்டிங் அணுகுமுறையை அதிரடியாக வைத்துக் கொள்ள விரும்புகிறார் என்று இதன் மூலம் தெரிகிறது. மேலும் இதையே டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி தொடர்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் நிலையாக விளையாடி பெரிய அளவில் விராட் கோலி ரன்கள் குவித்தார். மூன்றாவது போட்டியில் சூப்பர் மேன் போல பறந்து ஒரு சிக்ஸரை தடுத்து ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றார். இல்லையென்றால் அது நடந்து இருக்காது.

ஆனால் இந்த தொடரில் அவரது நோக்கம் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் சிக்ஸருக்கு அடிக்க வேண்டும் என்பதாக இருந்தத. இது டி20 உலக கோப்பையில் அவர் எப்படி விளையாடப் போகிறார்? என்பதையும் காட்டுகிறது. அவர் ஆக்ரோஷமாக விளையாட விரும்புகிறார். அப்படி அவர் பேட்டிங் செய்வதை பார்க்க நன்றாக இருக்கிறது.

நாம் விராட் கோலியை பற்றி பேசுகிறோம். அவர் கிரிக்கெட்டை உலகம் முழுக்க சிறப்பாக விளையாடியவர்களில் ஒருவர். அவர் தனக்குள் இருக்கும் ஸ்விட்ச்சை மாற்றினால், அவரால் எந்த மாதிரியான வேகத்தில் வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய முடியும். அதை அவர் நமக்கு மீண்டும் ஒருமுறை காட்டினார்” என்று கூறி இருக்கிறார்.