“ஆண்டர்சன் கிளாஸ்.. ஆனா பும்ரா வெறித்தனமான ஆள்.. மிரண்டுட்டேன்” – ஆஸி மைக்கேல் கிளார்க் பேச்சு

0
115
Bumrah

பொதுவாக இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் சமீப காலத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் எப்பொழுதும் தலைப்பு செய்தியாக இருந்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இப்படியான செய்தியாக இருப்பார்கள்.

ஆனால் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில், வேகப்பந்துவீச்சாளர்கள் தலைப்பு செய்தியாக மாறி இருக்கிறார்கள்.

- Advertisement -

முதல் டெஸ்டில் இடம்பெறாத இங்கிலாந்தின் ஆண்டர்சன் இரண்டாவது டெஸ்டில் இடம் பெற்றார். மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் மொத்தம் ஐந்து விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயமாக அவரது வயது 41. இந்த வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் வெற்றிகரமாக இருப்பது என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது ஒன்று.

இதேபோல் இன்னொரு பக்கம் ஆச்சரியப்படுத்த கூடிய வேகப்பந்துவீச்சாளராக பும்ரா இருக்கிறார். அவர் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் வீசிய சில டெலிவரிகள் உலகத்தின் எந்த பந்துவீச்சாளராலும் வீச முடியாத ஒன்றாக இருக்கிறது. இரண்டு டெஸ்ட் போட்டியிலும் சேர்த்து அவர் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆச்சரியத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். காரணம் ஆடுகளங்கள் இரண்டுமே வேகப்பந்து வீச்சுக்கு கொஞ்சம் கூட சாதகம் தரவில்லை.

- Advertisement -

தற்போது இவர்கள் இருவரை பற்றி பேசி உள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது “ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சாதகம் இல்லாத ஆடுகளத்தில் மிகச் சிறப்பாக பந்து வீசினார். மேலும் பும்ரா பற்றி என்ன சொல்வது அவர் மிகவும் அதிசயத்தனமான ஒரு பந்துவீச்சாளர். அவர் வெறித்தனமானவர். சூழ்நிலைக்கு தகுந்தது போல் பந்துவீசி அசத்தி வினோதமான பந்துவீச்சாளராக இருக்கிறார்.

ஆண்டர்சன் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை பார்த்திருக்கிறார். சில காலம் காயத்தால் பாதிக்கப்பட்டும் இருக்கிறார். ஆனால் இவ்வளவு காலம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது நம்ப முடியாத ஒன்று. தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய திறமை மற்றும் தரத்தை காட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க : “மும்பை கிடையாது.. 2024 ஐபிஎல்-ல் இந்த டீம் உறுதியா பிளே-ஆப் போகுது” – கவாஸ்கர் கணிப்பு

ஆண்டர்சன் இங்கிலாந்து மைதானங்களில் மட்டுமே சாதிக்கக் கூடியவர் என்கின்ற ஒரு பேச்சு இருந்தது. ஆனால் தான் அப்படி கிடையாது என்று அவர் தொடர்ந்து நிரூபிக்கிறார். அவர் இப்பொழுதும் இங்கிலாந்து அணியின் மிக முக்கியமானவராக திகழ்கிறார். இரண்டாவது டெஸ்டில் அவர் பந்து வீசியது போல வீசினால், அவர் ஓய்வு பெற வேண்டிய அவசியமே இல்லை” என்று கூறியிருக்கிறார்.