இந்திய அணியில் டேஞ்சர் பேட்ஸ்மேன் பவுலர் இவங்க 2 பேருதான்.. சதாப் கான் எதிர்பாராத தேர்வு!

0
3133
Sadhab

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முன்கூட்டியே களைக்கட்ட ஆரம்பித்திருக்கிறது. பயிற்சி போட்டிகளை மழை ஏமாற்றினால் கூட, ரசிகர்கள் மைதானங்களுக்கு வருவதை நிறுத்தவில்லை.

மேலும் போட்டி இல்லாத இன்றைய நாளில் கூட ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே தங்களது பிடித்தமான கிரிக்கெட் வீரர்களுக்கான வரவேற்பை பிரம்மாண்டமாக கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் உலகக் கோப்பை விளையாடுவதற்கு இந்தியா வந்திருக்கும் வெளிநாட்டு வீரர்களும், இதை ஒரு கிரிக்கெட் திருவிழாவாக எண்ணி மிகவும் மகிழ்வாக அனுபவித்து வருகிறார்கள்.

இதன் காரணமாக வெளியில் செல்வது, புகைப்படங்கள் எடுப்பது, இந்திய உணவுகளை ருசிப்பது, பல்வேறு வகையான சுவாரசியமான கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளிப்பது என உற்சாகமாக இருந்து வருகிறார்கள்.

தற்பொழுது இந்தியா வந்திருக்கக்கூடிய 9 அணிகளில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணி இரண்டும்தான் அதிக காலம் வராமல் இருந்து வந்த அணிகளாக இருக்கின்றன.

- Advertisement -

பாகிஸ்தானி 2016 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை விளையாட இந்தியா வந்தது. தற்பொழுது 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை விளையாட வந்திருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்த உலகக் கோப்பை தொடர் இந்திய சுற்றுப்பயணத்தை மிகவும் அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்தில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அது பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சதாப் கான் இந்திய அணியில் தனக்கு பிடித்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் யார் என்று கூறுகையில் “இந்திய அணியில் பேட்மேனாக ரோஹித் சர்மா எனக்கு மிகவும் பிடித்தவர். அவர் செட் ஆகிவிட்டால் அவருக்கு பந்து வீசுவது கடினம். அதேபோல் இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் எனக்கு மிகவும் பிடித்தமானவர்!” என்று கூறியிருக்கிறார்!