“அப்ப பேட்ஸ்மேன் நீங்க ரன் அடிக்க மாட்டிங்க.. அதையும் பவுலரே செய்யனும்!” – ஹர்பஜன் சிங் சிறப்பான சம்பவம்!

0
274
Harbhajan

நடப்பு ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இரண்டாவது சுற்றை எட்டி இருக்கிறது. இரண்டாவது சுற்று மிகப்பெரிய போட்டியாக முதல் சுற்றைப் போலவே இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி அமைந்திருக்கிறது!

இந்திய அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக எந்த வீரர்களை பிளேயிங் லெவனில் எடுப்பது? என்பது குறித்து நிறைய குழப்பத்தில் இருப்பதாகவே தெரிகிறது.

- Advertisement -

ஆசிய கோப்பை முதல் சுற்று இரண்டு ஆட்டங்களுக்கு இந்திய அணியில் கே.எல்.ராகுல் இணையவில்லை. எனவே அவருடைய இடத்தில் இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் இடம்பெற்ற. மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான உயர் அழுத்த போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங்கில் செயல்பட்டார்.

இன்னொரு பக்கத்தில் பும்ரா பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா சென்றார். இதனால் விளையாடும் அணியில் முதல் போட்டியில் விளையாடாத முகமது ஷமி இடம் பெற்றார்.

இப்பொழுது கேஎல் ராகுல் மற்றும் பும்ரா திரும்ப வந்திருக்கும் நிலையில், இஷான் கிஷான் மற்றும் முகமது ஷமி இருவரும் பிளேயிங் லெவலில் இருந்து நீக்கப்பட வேண்டுமா? என்கின்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான தீர்வை இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “ஷமி கட்டாயம் விளையாட வேண்டும். அனுபவத்தை எப்பொழுதும் வாங்க முடியாது. அவரைப்போல ஒரு அனுபவசாலியான பந்துவீச்சாளர் வெளியில் அமர்ந்திருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சிராஜிக்கு முன்னால் ஷமிதான் விளையாட வேண்டும்.

உங்களுக்கு சிராஜ் விளையாட வேண்டும் என்றால், சர்துல் தாக்கூர் தரும் பேட்டிங் ஆப்ஷனை எதிர்பார்க்க வேண்டாம். உங்களிடம் தற்பொழுது நம்பர் 7 வரை பேட்டிங் இருக்கிறது. இதற்கு அடுத்து உங்களுக்கு சரியான பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும்.

உங்களுக்கு ரன் தேவை எனும் பொழுது, உங்களது பேட்ஸ்மேன்களை ரன்கள் அடிக்கச் சொல்லுங்கள். நீங்கள் 260 ரன்கள் எடுத்தாலும் கூட, அதை பாதுகாப்பது பந்துவீச்சாளர்களின் பொறுப்பு.

பலர் சர்துல் தாக்கூர் பேட்டிங் செய்வார் என சொல்கிறார்கள். இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நாம் அரை மனதுடன் ஆட்டத்திற்கு செல்ல முடியாது. சிராஜ் செய்வதை சர்துல் தாக்கூரால் பந்து வீச்சில் செய்ய முடியுமா? அவரால் சிறப்பாக செய்ய முடிந்தால், நீங்கள் உங்களது பந்துவீச்சை பலப்படுத்தி, உங்கள் பேட்ஸ்மேன்களை ரன்கள் அடிக்க சொல்லுங்கள்!” என்று கூறியிருக்கிறார்!