பிரிஸ்பேன் டெஸ்ட்.. இந்திய அணியை காப்பாற்றுவாரா வருண பகவான்?. வெளிவந்துள்ள வானிலை அறிக்கை.. முழு விவரம்

0
591

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது மழையால் பாதிக்கப்படும் வருகிறது.

இந்த சூழ்நிலையில் நான்காம் மற்றும் ஐந்தாம் நாட்களில் மழையின் தாக்கம் எப்படி இருக்கும் என்கிற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் நடைபெற்று வருகிற நிலையில் முதல் மூன்று நாட்களில் மழையின் தாக்கம் ஓரளவு இருந்தாலும் முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு இன்று முதல் இன்னிங்ஸ் துவங்கிய இந்திய அணி 51 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில் மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு இன்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்திய அணி ஏற்கனவே நான்கு விக்கெட்டுகள் இழந்திருக்கும் நிலையில் இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் உள்ளது. ஏற்கனவே சிக்கலில் இருக்கும் இந்திய அணிக்கு அடுத்த இரண்டு நாள் ஆட்டம் முற்றிலுமாக நடைபெற்றால் இந்திய அணி தோல்வி அடைவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை குறித்த அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை அறிக்கை

அதில் நாளை ஆஸ்திரேலிய நேரப்படி அதிகாலை 4 மணி முதல் 8:00 மணி வரை மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்திய நேரப்படி (திங்கள் இரவு 10.30 மணி முதல் செவ்வாய் அதிகாலை 2.30 மணி வரை ) என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு ஆஸ்திரேலிய நேரப்படி மாலை 7 மணிக்கு மேல் மழை பொழியும். மேலும் போட்டி நேரத்தில் காலை 11 மணிக்கு மேல் (இந்திய நேரப்படி 05.30 மணிக்கு ) மழை பொழியும் எனவும், பிற்பகல் முழுக்க மழைப்பொழிவுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமான முடிவாக இருக்கிறது.

இதையும் படிங்க:2 ரூம்ல 11 பேர் வாழ்றோம்.. இப்போ என் மகளால் எங்க வாழ்க்கை மாற போகுது – மகளிர் ஐபிஎல் சிம்ரனின் தந்தை உணர்ச்சிப் பேட்டி

ஐந்தாவது நாளான புதன் கிழமை காலை மற்றும் மாலை மழை பொழிய அதிக வாய்ப்பு இல்லை. ஆனால் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் இந்திய நேரப்படி 07.30 முதல் 09.30 வரை) இடியுடன் கூடிய மழை பொழியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நேரத்தில் மழை பொழிய 66% முதல் 75% வரை வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிற்பகல் 3 மணி வரை மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணி தடுமாறி வரும் நிலையில் பேட்ஸ்மேன்கள் அணியை காப்பாற்றுவார்களா அல்லது வருண பகவான் இந்திய அணி காப்பாற்றுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -