2 ரூம்ல 11 பேர் வாழ்றோம்.. இப்போ என் மகளால் எங்க வாழ்க்கை மாற போகுது – மகளிர் ஐபிஎல் சிம்ரனின் தந்தை உணர்ச்சிப் பேட்டி

0
261

மகளிர் ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வருட தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான மெகா ஏலம் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடைபெற்றது.

இதில் குஜராத் அணிக்காக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட சிம்ரன் ஷயிக் குறித்து அவரது தந்தை சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

1.9 கோடிக்கு ஏலம் சென்ற சிம்ரன் ஷயிக்

இந்தியாவில் ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போன்று பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் மிகப் பிரபலமான முறையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஐபிஎல் தொடரில் மும்பை அணியும், இரண்டாவது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய நிலையில் மூன்றாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அதற்கான மெகா ஏலம் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற நிலையில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை வாங்கினர்.

இதில் குஜராத் அணிக்காக வாங்கப்பட்ட மும்பையைச் சேர்ந்த வீராங்கனை சிம்ரன் ஷயிக் 1.9 கோடி கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறார். இதுவே நேற்றைய ஏலத்தில் ஒரு வீராங்கனை சென்ற அதிகபட்ச தொகையாகும். இதற்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டேன்ட்ரா டோட்டின் 1.7 கோடி ரூபாய்க்கும், மூன்றாவது இடத்தில் 16 வயதான கமாலினி 1.6 கோடி ரூபாய்க்கு மும்பை அணியால் வாங்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் சிம்ரன் ஷயிக்கின் தந்தை ஜாஹித் தனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கிறது எனவும், இந்தத் தொகை ஒரு நல்ல வீட்டை வாங்குவதற்கு உதவும் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கண்ணியமான வாழ்வை வாழ்வோம்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் திறந்த வாய்க்கால்களைக் கொண்ட குறுகிய பாதைக்கு அருகில் வாழ்ந்தோம். எங்கள் குடும்பத்தில் நாங்கள் மொத்தம் 11 பேர். அனைவரும் இரண்டு அறைகளில்தான் வசிக்கிறோம். இனி இந்த பணத்தில் நாங்கள் நல்ல வீடு ஒன்றை வாங்கி கண்ணியமான வாழ்க்கையை வாழ போகிறோம். கடவுளுக்கு நன்றி சிம்ரனை விளையாடுவதை தடுக்க சொன்ன நண்பர்களின் பேச்சை நான் கேட்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:அந்த 1 பந்துக்கு.. கோலி கொடுத்த ரியாக்ஷன்.. அதுக்கு முன்னாடி இவரை நான் அப்படி பாக்கல – ஆகாஷ் சோப்ரா பேட்டி

மேலும் சிம்ரன் ஷயிக் அவரது தந்தை குறித்துக் கூறும் போது “ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து பின் தங்கிய நிலையில் இருந்து கிரிக்கெட் விளையாடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நான் கிரிக்கெட் விளையாடுவது குறித்து மக்கள் கேட்ட கேள்விகள் எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் என்னை வீட்டு வேலை கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது விளையாட்டு முன்னோக்கி எடுத்துச் செல்லாது என்று கூற என் தந்தை அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் விளையாடுவதை நிறுத்தவில்லை. அதே நபர்கள் தற்போதைய எங்களை வாழ்த்துகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -