உலக கிரிக்கெட்

இந்திய அணியின் 40 ஆண்டு கால சாதனை தகர்ப்பு.. ஒருநாள் கிரிக்கெட்டில் மெகா சாதனை படைத்த அமெரிக்கா.. ஓமனை வீழ்த்தியது

ஐசிசி கிரிக்கெட் இரண்டாவது உலகக் கோப்பை லீக் தொடரில் 54 ஆவது போட்டியில் அமெரிக்கா மற்றும் ஓமன் அணிகள் இணைந்து விளையாடின.

- Advertisement -

இதில் சிறப்பாக விளையாடிய அமெரிக்கா அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி இந்திய அணி வைத்திருந்த 40 ஆண்டு கால சாதனையை முறியடித்தது.

அமெரிக்கா ஓமன் ஒருநாள் போட்டி

2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் தொடரின் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதன் 54ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஓமன் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் குவித்தது. அமெரிக்க அணியை பொறுத்தவரை மிடில் வரிசை பேட்ஸ்மேன் மிலிந்த் குமார் 82 பந்துகளை எதிர் கொண்டு 6 பவுண்டரியோடு 47 ரன்கள் குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் குறைவான ரன்களுக்கு வெளியேறினார்கள்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ஓமன் அணி களம் இறங்கியது. ஆனால் அமெரிக்க அணியின் மிகச் சிறப்பான பந்துவீச்சால் ஓமன் அணி 25.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்து 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலமாக அமெரிக்க அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.

- Advertisement -

40 ஆண்டு கால சாதனையை வீழ்த்தியது

1985 ஆம் ஆண்டு இந்திய அணி சார்ஜாவில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 125 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதற்குப் பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை 87 ரன்களுக்கு வீழ்த்தி 38 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை இந்திய அணி படைத்தது. அதற்குப் பின்னர் 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்க அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதாவது 4671 ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு 50 ஓவர் வடிவத்தில் இவ்வளவு குறைந்த ரன்கள் குவித்து அமெரிக்க அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க:இந்தியா பங்களாதேஷ் 2வது ODI.. போட்டி தொடங்கும் நேரம் இந்தியாவில் எந்த சேனல் மேலும் 2 முக்கிய தகவல்கள்.. முழு விவரம்

அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் விளையாடிய அமெரிக்க அணி ஒரு புதிய மைல்கல் ஒன்றை படைத்துள்ளது. அதாவது இந்த போட்டியில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் கூட பயன்படுத்தப்படாமல் சுழற் பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்தே அமெரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் அமெரிக்க அணியின் நாஸ்தஸ் 7.3 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 40 ஆண்டுகளாக வைத்திருந்த இந்த பெரிய சாதனையை அமெரிக்க அணி வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by