இந்தியா பங்களாதேஷ் 2வது ODI.. போட்டி தொடங்கும் நேரம் இந்தியாவில் எந்த சேனல் மேலும் 2 முக்கிய தகவல்கள்.. முழு விவரம்

0
1751

நாளை நடைபெற உள்ள சாம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாட உள்ளன.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒளிபரப்பாக உள்ள சேனல், போட்டித் தொடங்கும் நேரம் மற்றும் மைதான அறிக்கை உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

- Advertisement -

துபாயில் முதல் போட்டி

இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை முழுவதுமாக வென்று விட்டு பெரிய நம்பிக்கையோடு இந்த தொடரில் களமிறங்க உள்ளது. இதன் முதல் போட்டியாக இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதுவரை 41 போட்டிகளில் விளையாடியுள்ள போட்டிகளில் இந்திய அணி 32 போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

எனவே நாளை நடைபெற உள்ள போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் நாளை நடைபெற உள்ள போட்டி இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணிக்கு ஒரு சிறிய முன்னேற்பாடாக இருக்கும். இந்த சூழ்நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டி இந்தியாவில் ஒளிபரப்பப்படும் சேனல் மற்றும் போட்டி நடைபெறும் நேரம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

- Advertisement -

எந்த சேனலில் பார்க்கலாம்

நாளை மதியம் 2:30 மணி அளவில் தொடங்க உள்ள இந்த போட்டி இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க் சேனல்களில் நேரடியாக கண்டு களிக்கலாம். மேலும் இந்த போட்டியை ஜியோ ஸ்டார் இணையதளத்திலும் நேரடியாக காணும் முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 20% வெப்பநிலை இருக்கும் என்பதால் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் முற்றிலும் குறைவு என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:T20 WCல் செஞ்ச அந்த தப்பை செய்ய மாட்டோம்.. எவ்ளோ பேர் காயமானாலும் நியூசி அணி இதுல ஸ்ட்ராங் – ஷேன் பாண்ட்

மேலும் போட்டி நடைபெற உள்ள துபாய் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியில் தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியை சமாளிப்பார்களா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் வங்கதேச அணியும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் வலுவான கலவையில் இருப்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு பெரிய விருந்தாக இருக்கும். மேலும் இதற்கு அடுத்த ஆட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மிகப்பெரிய போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -