தற்போது சிறந்த பார்மில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், அணியின் தொடக்க வெற்றி குறித்தும் தனது பேட்டிங் செயல்பாடு குறித்தும் மகிழ்ச்சியாக பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்திய அணி முதல் போட்டியில் சிறப்பாக வெற்றி பெற்று தொடரை நேர்மறையான கணக்கில் தொடங்கி உள்ளது. ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.
குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது போட்டிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொடுத்த வலுவான தொடக்கம் வெற்றிக்கு முக்கிய அடித்தளமாக மாறியுள்ளது.
இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசும்போது “உண்மையிலேயே மிகவும் நன்றாக உணர்கிறேன். போட்டி முடிந்து நாங்கள் வெற்றி பெற்ற இந்த தருணத்தில் இருக்கிறோம். அணி வெற்றிபெறும் பக்கத்தில் முடிவடைவதற்கு நீங்கள் எந்த பங்களிப்பை கொடுத்தாலும் அது சிறப்பான உணர்வை தரும் என்று நினைக்கிறேன். அதனால் அணியில் உள்ள அனைவரிடமிருந்தும் இது ஒரு மிகச்சிறந்த பங்களிப்பாகும். இன்று இது முற்றிலும் ஒரு டீம் கேம் ஆக இருந்தது. இந்த தொடரை நாங்கள் சிறப்பாக தொடங்கி இருப்பது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது”
“நாங்கள் கிரீஸில் நடுவில் நிறைய பேசிக்கொள்வோம் ஆனால் உண்மையில் அதில் எந்த அர்த்தமும் இருக்காது. நாங்கள் வாட்ச் தி பால் செய்து அதை ஹிட் ஹார்ட் செய்கிறோம். இது எங்களுக்கு மிகச்சிறப்பாக வொர்க் அவுட் ஆகி வருகிறது, அவருடன் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்வது எனக்கு பிடிக்கும். இரண்டாவது பாதியில் பால் அதிகளவில் ஸ்விங் ஆனது, அளவுக்கு அதிகமாகவே இருந்தது. ஆனால் சர்பேஸில் இருந்து பால் மிக அழகாக பேட்டிற்கு வந்தது. அதனால் நானும் அபியும் பவர்ப்ளேவில் கீப் தி ஷேப் செய்து மிகவும் பாசிட்டிவ் இண்டென்ட் உடன் விளையாட நினைத்தோம்”
“நாங்கள் ஒரு பிளையிங் ஸ்டார்ட் பெற்றவுடன், முதல் பாதியிலேயே போட்டியை முடிக்க முடியும் என்று உணர்ந்தோம். ஆறு ஓவர்களில் 90 ரன்களுக்கு மேல் எடுத்தது ஒரு கிரேட் ஸ்டார்ட். அதனால் நாங்கள் ஆல் அவுட் அட்டாக் செய்ய விரும்பினோம். நிச்சயமாக விக்கெட் கீப்பிங் செய்யும்போது உங்களது பேட்டிங் பற்றியும் யோசிப்பீர்கள். இன்று விக்கெட் கீப்பிங் செய்யும்போது எனது கேம் பிளானை யோசித்தேன், ஆனால் பேட்டிங் செய்ய வந்தபோது நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. முதல் பாதியில் லென்த் ஏரியாவில் இருந்து பால் சற்று ஸ்டாப் ஆகி வந்தது, ஆனால் இரண்டாவது பாதியில் அவுட்ஃபீல்டில் அதிக டியூ இருந்ததால் பால் மிக அழகாக பேட்டிற்கு வந்தது. அதனால் நான் பேட்டிங்கை மிகவும் என்ஜாய் செய்தேன்” என்று கூறி இருக்கிறார்.