தற்போது சிறந்த பார்மில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடினமான இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடித்து அபார வெற்றி பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சியாக பாராட்டி பேசி இருக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “அற்புதமானது. நாம் ஜெட் லேக் பற்றி இனி மறந்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் பவுலிங் செய்யத் தொடங்கியபோது, அது சற்று ஸ்லோவாக விளையாடுகிறது என்று நினைத்தேன். பால் சற்று ஹோல்ட் ஆனது, மேலும் நாங்கள் அடிக்க வேண்டிய ஹார்ட் லெந்துகளை விட சற்று முன்னால் பவுலிங் செய்தோம். ஆனால் ஆட்டம் முன்னேறத் தொடங்கியதும், டியூ வருவதைக் கண்டோம், பால் பேட்டிற்கு மிகவும் நன்றாக வந்ததால் விக்ெட் ஃப்ளாட்டாக ஸ்கிட் ஆனது, அதனால்தான் அவர்கள் மொமெண்டம் பெற்று 220 ரன்களை அடைந்தனர்”
“அவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள், ஆனால் வெளிப்படையாக எங்களுக்கு அந்த வகையான தொடக்கம் தேவைப்பட்டது, குறிப்பாக நீங்கள் 220 ரன்களை துரத்தும்போது, ஆறு ஓவர்களில் 80-85 ரன்கள் எடுப்பது ஒரு ட்ரெமண்டஸ் ஸ்டார்ட் ஆகும்”
“ஆம், அவர்கள் முற்றிலும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்கள் எப்படி தங்கள் பிசினஸை பார்க்க வேண்டும் என்று நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் ஒன்னு சேரும்போது, அவர்கள் முன்னோக்கி கொண்டு செல்லும் மொமெண்டம்பற்றி தான் விஷயம், இன்று அதற்கொரு உதாரணம். அதனால் வெளிப்படையாக இது ஒவ்வொரு முறையும் நடக்காது, ஆனால் அவர்கள் கிளிக் ஆனவுடன், அவர்கள் நமக்காக ஒரு கேமை செட் செய்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள், எங்களில் மீதமுள்ளவர்கள் வந்து ஷிப்பை ஸ்டெடி செய்து கேமை பினிஷ் செய்வதை உறுதி செய்கிறோம்”
“ஆம், நிச்சயமாக. அவர் எங்களுக்கு நிறைய ஆப்ஷன்களை தருகிறார், குறிப்பாக லெஃப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் அல்லது ரைட்-ஹேண்டர்கள் பேட்டிங் செய்யும்போது, குறிப்பாக இந்த மைதானத்தில், உள்ளே வந்து அந்த இரண்டு-மூன்று க்ரூஷியல் ஓவர்களை பவுலிங் செய்வது உண்மையில் மொமெண்டத்தை மாற்றும். மேலும் இன்று அவர் காட்டிய காம் அண்ட் கம்போஸ்டு நேச்சர், அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது சும்மா மேக்னிஃபிசென்ட்டாக இருந்தது என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.