இந்திய கிரிக்கெட்

429 ரன்ஸ்.. ஹாரி புரூக் படைத்த உலக மகா ரெக்கார்ட்.. இலங்கையை பாகிஸ்தானில் வைத்து சம்பவம்

தற்போது பாகிஸ்தானில் இங்கிலாந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் இரட்டை சதம் அடித்து பிரம்மாண்ட சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 429 ரன்கள் குவித்திருக்கிறது. அந்த அணிக்கு டாம் பாண்டன் 51 பந்துகளில் 50 ரன்கள், ஜோ ரூட் 66 பந்துகளில் 69 ரன்கள், வில் ஜேக்ஸ் ஆட்டம் இழக்காமல் அதிரடியாக 30 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்கள்.

ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் 115 பந்துகளில் இரட்டை சதம் அடித்து, மொத்தம் 116 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 202 ரன்கள் குவித்தார்.

கடந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில் 117 பந்துகளில் இரட்டை சதம் அடித்தது அதிவேக இரட்டை சதமாக ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவானது. தற்போது இதை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் ஒரே மாதத்தில் முறியடித்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by