“தப்பு செஞ்சது அம்பயர்.. இதோ ஆதாரம்.. என்ன பண்ண போறிங்க?!” – மேத்யூஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

0
8186
Mathews

13வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று டெல்லி மைதானத்தில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை கொண்ட போட்டி பரபரப்பாக நடைபெற்று முடிந்தது!

இரண்டு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்தாலும் கூ,ட இந்த போட்டி திடீரென முக்கியத்துவம் கொண்டதாக சமூக வலைதளங்களில் மாறி ரசிகர்கள் தொலைக்காட்சியில் போட்டியைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

காரணம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் ஒரு பந்தை கூட சந்திக்காமல் ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்த அபூர்வ சம்பவம் நேற்றைய போட்டியில் இலங்கை பேட்டிங் செய்யும்பொழுது நடந்தது.

இலங்கை அணியின் மேத்யூஸ் விளையாட உள்ளே வந்து இரண்டு நிமிடங்களுக்குள் முதல் பந்தை சந்திக்க தயாராகாத காரணத்தினால், பங்களாதேஷ் அணி கேப்டன் இதை முறையிட்டதால், மேத்யூஸ் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இதற்கு அடுத்து போட்டியின் நான்காவது நடுவர் விளக்கம் கொடுத்த பொழுது, அவர் தன்னுடைய ஹெல்மெட்டை சரி செய்வதற்கு முன்னாகவே, பொதுவாக வழங்கப்படும் இரண்டு நிமிடங்களை வீணடித்து விட்டார், அதற்கு மேலும் அவர் ஹெல்மெட்டை கேட்ட பொழுதுதான் பங்களாதேஷ் கேப்டன் அப்பீல் செய்தார் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

நேற்று முதல் இந்த பிரச்சனை கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் சூடான ஒன்றாக பலராலும் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலும் எந்த கிரிக்கெட் வீரர்களும் இந்த செயலை ஆதரித்து இதுவரை பேசவில்லை.

தற்பொழுது இது குறித்து ஆதாரத்தை வெளியிட்டுள்ள மேத்யூஸ் தான் ஹெல்மெட்டை சரி செய்த பின், வழங்கப்படும் இரண்டு நிமிடத்தில் இன்னும் ஐந்து நொடிகள் மீதம் இருந்ததற்கான ஆதாரத்தை புகைப்பட வெளியிட்டு இருக்கிறார். அதில் தெளிவாக ஐந்து நொடிகள் மீதம் இருப்பது தெரிகிறது.

இதுகுறித்து மேத்யூஸ் சமூக வலைதளத்தில் கூறும் பொழுது “நான்காவது நடுவரின் தவறு இது. எனக்கு ஹெல்மெட்டை கொடுத்த பிறகும் ஐந்து நொடிகள் மீதும் இருந்ததை வீடியோ ஆதாரம் நிரூபிக்கிறது. நான்காவது நடுவர் இதை சரி செய்ய முடியுமா? ஹெல்மெட் இல்லாமல் எதிர்கொள்ள முடியாது என்பது என்னுடைய பாதுகாப்பு சம்பந்தமானது!” என்று கூறியிருக்கிறார்!