அதிரடி.. அம்பையர்களாக தேர்வு.. கோலியுடன் உலக கோப்பையை வென்ற 2 வீரர்கள்

0
1104

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டியில் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியை இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இளம்பிரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் பொருட்டு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா அணியில் இடம்பெறவில்லை

- Advertisement -

இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தொடரை கைப்பற்ற வேண்டிய இருப்பதால் நிச்சயமாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம் இறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில் 13000 ரன்களை குறைந்த போட்டிகளில் எட்டிய வீரர் என்ற சாதனையை படைக்க விராட் கோலிக்கு இன்னும் 102 ரன்கள் தேவைப்படும் நிலையில் இன்றைய போட்டியில் அவர் களமிறங்கினால் நிச்சயமாக அந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குடோருக்கான அண்டர் 19 உலக கோப்பையில் இந்திய அணியை வெற்றிக்கு வழி நடத்தியவர் விராட் கோலி. அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதோடு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி உடன் அந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடிய பலரும் சீனியர் அணியிலும் இடம் பெற்று விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விராட் கோலியுடன் 2008 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பை வெற்றி பெற்ற அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மணிஷ் பாண்டே , சித்தார்த் கவுல்,சௌரப் திவாரி போன்ற வீரர்களும் 2008 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அண்டர் 19 அணியில் இடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் விளையாடிய பல வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் முதல் தரப் போட்டியில் சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இந்தியா 2008 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை கைப்பற்ற முக்கிய வீரர்களாக இருந்தவர்கள் தன்மய் ஸ்ரீவஸ்தவா மற்றும் அஜித்தேஷ் அர்கள். இவர்கள் இருவரும் பிசிசிஐ நடத்திய அம்பையர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று புல் நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முதல் தரப் போட்டிகளில் அம்பயர்களாக பணியாற்றும் தகுதியை பெற்றிருக்கின்றனர்.

- Advertisement -

தன்மய் ஸ்ரீவஸ்தவா 2008 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிற்காக அதிக ரன்களை குவித்த வீரர் ஆவார். அந்த உலகக் கோப்பையின் ஆறு போட்டிகளில் விளையாடிய இவர் 262 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இறுதிப் போட்டியில் அதிகபட்சமாக 46 ரன்களை குவித்த வீரரும் இவர் தான். அஜித்தேஸ் அர்கள் இறுதிப் போட்டியில் 5 ஓவர்கள் பந்துவீசி ஏழு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர். மேலும் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்று பிசிசிஐ-யின் நடுவர்களுக்கான தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வருகின்ற ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் அகமதாபாத்தில் நடைபெறும் பிசிசிஐ கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களாக பணியாற்ற இருக்கிறார்கள். இதுவரை 90 முதல் தரப் போட்டிகளில் விளையாடியிருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தன்மய் ஸ்ரீவஸ்தவா 4918 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் பத்து சதங்களும் 27 அரை சதங்களும் அடங்கும். பரோடா மாநிலத்தைச் சேர்ந்தவரான அஜித்தேஸ் அவர்கள் பத்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.