“உண்மை இதுதான்.. என்னால முடியல ஓட வைக்காதனு கோலிகிட்ட சொன்னேன்!” – கே.எல்.ராகுல் வெளியிட்ட சுவாரசியமான தகவல்!

0
4518
Rahul

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களது முதல் ஆட்டத்தில் மோதிக்கொண்ட போட்டி மிகவும் விறுவிறுப்பான ஒன்றாக அமைந்தது!

இந்திய அணி சூழல் வியூகம் மூலம் ஆஸ்திரேலியா அணியை 199 ரன்களில் மடக்கி மிகச் சிறப்பான முறையில் ஆட்டத்தின் முதல் பகுதியை முடித்தது. இதன் காரணமாக வெற்றி மிக எளிதான ஒன்று என்று ரசிகர்கள் நினைத்தார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி வழக்கம்போல் உலகக் கோப்பை எப்படி வருமோ, அதேபோல் பந்து வீச்சில் திரும்பி வந்து இந்தியா இரண்டு ரன்கள் எடுத்த போது மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தது.

இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் நேர்த்தியாக விளையாடி 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை கரை சேர்த்தார்கள். இந்திய அணியும் வெற்றியுடன் உலகக் கோப்பை பயணத்தை ஆரம்பித்தது. இந்திய அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ள இந்த வெற்றி மிகவும் முக்கியமானது.

இந்த போட்டி பற்றி பேசி உள்ள விராட் கோலி கூறும் பொழுது ” இந்த கடினமான சூழ்நிலையில் நாங்கள் வழக்கமான முறையில் விளையாடுவதற்கு அந்த பார்ட்னர்ஷிப் உதவியது. நாங்கள் தவறுகள் செய்யாமல் இருக்கவும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவும் முடிந்தது.

- Advertisement -

எங்களுக்கு போட்டியில் ஒரு நல்ல தொடக்கம் அமைந்திருந்தது. இது போன்ற வெற்றிக்குப் பிறகு அணி மிக நன்றாக உணர்கிறது. இந்த போட்டியில் நம்மால் நீண்ட தூரம் செல்ல முடியும் என்று கேஎல்.ராகுல் என்னிடம் கூறினார்!” என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய கேஎல்.ராகுல் கூறும் பொழுது ” நான் பொய் சொல்ல விரும்பவில்லை. நான் சோர்வாக இருந்தேன். பார்ட்னர்ஷிப் 50 முதல் 70 ரன்கள் தாண்டி பொழுது, இரண்டு ரன்களை ஓடி எடுக்க வேண்டாம், நம் ஆற்றலை கொஞ்சம் சேமித்து வைத்துக் கொள்வோம் என்று விராட் கோலி இடம் கேட்டுக் கொண்டேன்!” என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்!

இந்திய அணி நாளை டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியில் விளையாடுகிறது. இது விராட் கோலிக்கு சொந்த மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.