பதிரனா 100% உடல் தகுதி .. இலங்கை கிரிக்கெட் அறிவிப்பு.. திரும்ப சிஎஸ்கே அணிக்கு வர வாய்ப்பு இருக்கா ?

0
4061
Pathirana

இந்த ஆண்டு 17 வது ஐபிஎல் சீசனில் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் லீக் சுற்றில் கடைசி சில போட்டிகள் மட்டுமே இருப்பதால், ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் மதிஷா பதிரனா மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புவாரா? என்பது குறித்து எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து டி20 உலகக் கோப்பை விசா பெறுவதற்காக சொந்த நாட்டிற்கு பதிரனா திரும்பியிருந்தார். பிறகு அவர் தரம்சலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு விளையாடுவதற்கு வந்துவிட்டார். ஆனாலும் அவருக்கு தொடைப்பகுதியில் அப்பொழுது ஏற்பட்ட காயத்தால் மீண்டும் நாடு திரும்பிவிட்டார்.

- Advertisement -

மேலும் அவர் தற்போது ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் மட்டும் விளையாடி 13 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் அவருடைய எக்கனாமி 7.68 என்று மிகச் சிறப்பாக இருக்கிறது. நல்ல பவுலிங் ஃபார்மில் இருந்து, அணிக்கு தாக்கத்தை தந்து கொண்டு இருந்த நிலையில், சிஎஸ்கே அணி அவரை இழந்திருப்பது பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு அவர் முழு உடல் தகுதியை எட்டி விட்டதாக அறிவிப்பு செய்திருக்கிறது. எனவே அவர் உடல் தகுதியை எட்டி விட்டதால், மீண்டும் சிஎஸ்கே அணிக்கு வந்து விளையாடுவாரா? என்கின்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இதில் உண்மை நிலவரம் என்னவென்றால், இலங்கை கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக முன்கூட்டியே நேற்று அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்று விட்டது. இந்த அணியினருடன் பதிரனாவும் சென்றுவிட்டார். எனவே இதன் காரணமாக அவர் எஞ்சி இருக்கும் ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணிக்கு திரும்ப மாட்டார் என்பது உறுதி.

இதையும் படிங்க : ருதுராஜ் மாதிரி விராட் கோலி விளையாட கூடாதா?.. அவர மட்டும் ஏன் விமர்சனம் பண்றிங்க – அம்பதி ராயுடு பேட்டி

இந்த நிலையில் சிஎஸ்கே அணி லீக் சுற்றில் தங்களுடைய கடைசி போட்டியில் மே 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 99% இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு அந்த அணி முன்னேற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது!

- Advertisement -