“இலங்கை பயிற்சியாளர் எங்களை சும்மா விட மாட்டார்..ஏன் தெரியுமா?” – மொயின் அலி பரபரப்பு பேச்சு!

0
1545
Moeen

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தியதின் மூலமாக, தொடர் தற்பொழுது சூடுப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!

சிறிய அணிகளின் சிறப்பான ஆட்டத்தில் சிக்கிக்கொண்ட அணியாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மாறி இருக்கிறது. நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளிடம் தோல்வி அடைந்த இங்கிலாந்துக்கு, ஆப்கானிஸ்தான் அணி உடன் ஏற்பட்ட தோல்வி மிகப்பெரிய நெருக்கடியை கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி தரம்சாலா மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. மற்றும் எல்லா போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் இரண்டு புள்ளிகள் உடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

இதற்கு அடுத்து இங்கிலாந்து அணி இலங்கை அணி உடன் மோத இருக்கிறது. இனி வரக்கூடிய எல்லா போட்டிகளுமே இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டிகளை. வெல்லாவிட்டால் வெளியில் செல்ல வேண்டிய நிலைதான் உருவாகும். மேலும் ரன் ரேட் மிக மோசமாகவும் இருக்கிறது.

இந்த நிலையில் இலங்கை அணியின் தற்போதைய பயிற்சியாளர் சில்வர் வுட் 2020 மற்றும் 21 ஆம் ஆண்டு ஆசஸ் டெஸ்ட் தொடர் தோல்வியின் போது இங்கிலாந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அங்கிருந்து நேராக இலங்கை அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.

- Advertisement -

தற்பொழுது இவர் குறித்தும் இலங்கை போட்டி குறித்தும் பேசி உள்ள இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் மொயின் அலி “ஆமாம் நிச்சயமாக சில்வர் வுட் ஒரு நல்ல பயிற்சியாளர். அவர் எங்களை வீழ்த்துவதை பற்றி யோசித்து கொண்டு இருப்பார் என்று நான் நினைக்கிறேன். மேலும் தற்போது அவர்கள் ஒரு வெற்றிதான் பெற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. எனவே அவர்கள் அடுத்து வெற்றி பெற விரும்புவார்கள். இதனால் தன்னுடைய அணி குறித்து சில்வர் வுட் சிந்திப்பார்.

எனவே இது அவரை ஊக்கப்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கும். அவர் பேட் மற்றும் பங்குவீச்சில் அதிரடியாக வெளியே செல்லக்கூடியவர் இல்லை. ஆனால் போட்டிக்கு தங்கள் வீரர்களை சிறப்பாக தயார்படுத்துவார். மீண்டும் சொல்கிறேன் அவர் சிறந்த பயிற்சியாளர். மேலும் அவர் நல்ல மனிதர். நான் அவரது பயிற்சியின் கீழ் அவருடன் இருந்திருக்கிறேன். அவர் நல்ல உத்வேகத்துடன் எங்களுக்கான போட்டிக்கு தயாராகி இருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!