நடக்க இருக்கின்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய பேட்ஸ்மேன் ஒருவரின் விக்கெட் ஒரு குறிப்பிட்ட வழியில் மிக எளிதாக கிடைக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.
இந்த முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாய் என்று இரு நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி விளையாட இருக்கும் அனைத்துப் போட்டிகளும் துபாய் மைதானத்தில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய அணி தோல்வி முகத்தில் இருக்கிறது இருந்தாலும், துபாயில் அனைத்து போட்டிகளையும் விளையாட இருப்பது வித்தியாசமான ஒரு பின்னடைவை உருவாக்குகிறது. துபாயை பொருத்தவரை டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி வெல்வது பத்துக்கு ஒன்பது முறை நடக்கக் கூடியதாக இருக்கிறது. இங்கு டாஸ் வென்றால் போட்டியை வெல்லலாம் என்ற சூழ்நிலை காணப்படுகிறது.
அதே சமயத்தில் இந்திய அணி இடம் பெற்று இருக்கும் பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் என மூன்று நாடுகள் இடம் பெற்று இருக்கின்றன. இதில் இந்திய அணி குறைந்தது இரண்டு நாடுகளை வெல்ல வேண்டும். அதில் நல்ல ரன் ரேட் கிடைக்க வேண்டும். எனவே இந்திய அணி டாஸ் தோற்றால் போட்டியை இழப்பதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய நட்சத்திர வீரர்கள் ரஞ்சி இரண்டாம் கட்ட போட்டிகளில் விளையாடுகிறார்கள். இதில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பொறுப்பற்ற ஷாட் விளையாடி ஆட்டம் இழந்து இருக்கிறார். பெரிய ஷாட் விளையாட சென்று அவர் விக்கெட்டை கொடுத்து இருக்கிறார்.
இதையும் படிங்க : 2வது டி20.. இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு.. சஞ்சு சாம்சனால் முக்கிய வீரரை நீக்கிய பட்லர்
இது குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “மும்பை அணி ஆறு விக்கெட் இழந்திருக்கும் சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடியது மோசமான ஷாட் ஆகும். மிட் ஆன் பீல்டர் மேலே தள்ளப்பட்ட பிறகும் கூட அவர் பந்தை தூக்கி அடித்து ஆட்டம் இழந்தார். மேலும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்த இடத்தில் ஒரு வீரரை நிறுத்தி வைத்தால் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட் மிக எளிதாக கிடைக்கும். ஏனென்றால் அவர் தவறாமல் அந்த பெரிய ஷாட் விளையாட சென்று விக்கெட்டை கொடுப்பார்” என்று கூறியிருக்கிறார்.