நியூசிலாந்துக்கும் இதே ஃபார்முலா அடிதான் ; வெற்றிக்குப் பிறகு ரோகித் சர்மா பேச்சு!

0
690
Rohitsharma

இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட்டின் துவக்கத்திற்கு இலங்கை அணி உடன் உள்நாட்டில் விளையாடிய தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் அமைந்திருந்தது!

முதலில் டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தற்பொழுது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முழுமையாக கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

இன்று தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கட்டுகள் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது. கில் மற்றும் விராட் கோலி அபாரமாக சதம் அடித்தார்கள்.

இதற்கு அடுத்து விளையாடிய இலங்கை அணி முகமது சிராஜ் பந்துவீச்சில் மொத்தமாக சரிந்து 73 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் உலகச் சாதனை வெற்றியைp பதிவு செய்தது.

வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா
“இது எங்களுக்கு ஒரு சிறந்த தொடர். நாங்கள் நன்றாகப் பந்துவீசி விக்கட்டுகளை பெற்றோம் தேவையான சமயங்களில் ஆட்டத்தில் திருப்புமுறைகளை பெற்றோம். தொடர் முழுவதும் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பதை பார்க்க நன்றாக இருந்தது. ஸ்லீப் வைத்து பந்து வீச முகமது சிராஜ் தகுதியானவர் என்பதை பார்க்க மிக நன்றாக இருந்தது. அவர் பந்தை ஸ்விங் செய்யும் விதம் ஒரு அபூர்வ திறமை ஆகும்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அவர் சில காலமாக பந்துவீச்சில் தொடர்ந்து முன்னேறி வருவதை நாங்கள் பார்க்கிறோம். அவர் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க நாங்கள் எல்லாம் செய்தோம் ஆனால் அது கைகூடவில்லை. நியூசிலாந்து தொடர் பற்றி நாங்கள் இப்பொழுது எதுவும் பெரிதாக சிந்திக்கவில்லை. தொடருக்குள் சென்று எதையும் பார்ப்போம். ஆனால் இந்த தொடரில் நாங்கள் எப்படி செயல்பட்டோமே அப்படியே நியூசிலாந்துவுடனும் திருப்பி அதிரடியாக செயல்பட விரும்புகிறோம்!” என்று கூறியுள்ளார்!