“பாகிஸ்தான் அணி உலக கோப்பையில் தோத்ததற்கு காரணம் இந்தியாதான்.. வீரர்கள் இல்ல” – மிக்கி ஆர்தர் மீண்டும் பேச்சு!

0
207
Arthur

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற முடியாததோடு, ஆப்கானிஸ்தான் அணி இடமும் தோற்று வெளியேறியது.

இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய பூகம்பங்கள் வெடித்தது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருக்கு அப்போதைய கேப்டன் பாபர் அசாம் அனுப்பிய வாட்ஸ் அப் செய்திகள் வெளியே கசிந்தது.

- Advertisement -

இது எல்லாம் சேர்ந்து உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதே பெரிய பின்னடைவுகளை மனரீதியாகவும் நம்பிக்கை ரீதியாகவும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

இந்த விஷயங்களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, இந்தியாவிற்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் விளையாடிய பொழுது, பாகிஸ்தான் அணிக்கு எந்தவித ஆதரவும் கிடைக்காததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று, பாகிஸ்தான் அணியின் டைரக்டராக அப்போது இருந்த மிக்கி ஆர்தர் பேசியிருந்தார்.

இப்பொழுதும் இதையே மீண்டும் முன் வைத்து பேசி இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்குள் இருந்த பிரச்சனைகள் எதுவுமே பெரிது கிடையாது என்பதாகவும் கூறியிருக்கிறார். தற்பொழுது இவருடைய பாகிஸ்தான் டீம் டைரக்டர் என்கின்ற இடத்திற்கு முகமது ஹபீஸ் கொண்டுவரப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து மிக்கி ஆர்தர் கூறும் பொழுது ” இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு இல்லாதது பெரிய கடினமான விஷயமாக இருந்தது. உண்மையில் பாகிஸ்தான் அணியை உந்தக்கூடிய பெரிய விஷயமாக ஹோட்டல் மற்றும் மைதானங்களில் அவர்களுக்கு கிடைத்த ரசிகர்களின் ஆதரவுதான் இருந்தது. உலக கோப்பையில் எங்களுக்கு அது இந்தியாவில் சுத்தமாக கிடைக்கவில்லை. இது பெரிய பின்னடைவாக அமைந்தது.

அகமதாபாத்தில் எங்களுக்கு விரோதமான சூழ்நிலை காணப்பட்டது. நாங்கள் இதை எதிர்பார்த்துதான் இருந்தோம். அங்கு நடந்த எதற்கும் எங்கள் வீரர்கள் ஒரு முறை கூட புலம்பவில்லை. மேலும் அது குறித்து எந்த புகாரையும் அவர்கள் செய்யவில்லை. இருந்தாலும் வீரர்களுக்கு ஒரு உத்வேகம் தரும் விஷயங்கள் தடைபட்டது. இது தோல்வியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

மற்றபடி உண்மையில் எங்கள் அணிக்குள் வீரர்களிடையே எந்த மன வேறுபாடுகளும் இருக்கவில்லை. மேலும் அந்த சமயத்தில் நடந்த சில விஷயங்கள் எதுவும் எங்கள் வீரர்களை பாதிக்கவில்லை. எங்களுடைய திட்டங்கள் மற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரோல்கள் இது குறித்துதான் எங்கள் வீரர்கள் சிந்தித்து செயல்பட்டு கொண்டு இருந்தார்கள்” என்று கூறி இருக்கிறார்!