“எங்க இத்தனை தோல்விக்கு காரணம் இந்தியாதான்!” – பகார் ஜமான் வெளிப்படையாக உண்மையை ஏற்று பரபரப்பான பேச்சு!

0
43621

உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பாகிஸ்தான் அணி குறித்த மதிப்பு மிகப்பெரியதாக இருந்தது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரை இறுதிக்கு தகுதி வரும் நான்கு அணிகளில் பாகிஸ்தான் அணியும் ஒன்று என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் பாகிஸ்தான் அணி தற்போது மிக முக்கியமாக நியூசிலாந்து அணியின் வெற்றி தோல்வியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. மேலும் அப்படியான அரைஇறுதி வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளுக்கு பிறகு பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒரு நல்ல வெற்றியை பாகிஸ்தான் அணி பெற்றிருக்கிறது. பந்துவீச்சில் ஷாகின் ஷா அப்ரிடி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

இதேபோல் 205 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் அதிரடியாக 74 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். மேலும் இவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். சில ஆட்டங்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடர்பு குறித்து பேசிய பகார் ஜமான், இந்தியா பாகிஸ்தான் விளையாடிய போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது அந்த அணியை வெகுவாக பாதித்தது என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஆமாம் அந்த தோல்வி எங்களை பாதித்தது. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பது மிகப்பெரியது. அதனால் எந்த மாற்றமும் எங்களுக்குள் வரவில்லை என்று சொன்னால் நான் பொய் சொல்கிறேன் என்று அர்த்தம்.

ஆனால் அனைத்து வீரர்களுமே தொழில் முறை வீரர்கள் மற்றும் நிறைய கிரிக்கெட் விளையாடியவர்கள். மேலும் இந்தியாவுக்கு எதிராகவும் நிறைய போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள்.

இன்று நாங்கள் விளையாடிய விதத்தை எடுத்துக் கொண்டால் நாங்கள் ரிதத்திற்கு திரும்பி விட்டோம் என்று நினைக்கிறேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வந்த போட்டியில் பார்த்தது போல இது ஒரு நல்ல காம்பினேஷன் கொண்ட அணியாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!

நாளை நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதக்கூடிய போட்டி பாகிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோற்றால், அடுத்து நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி ஏறக்குறைய கால்இறுதி போட்டி போல் அமையும்.