2018 பந்தை சேதப்படுத்திய பிரச்சனை.. முதல் முறை மௌனம் கலைத்த வார்னர்.. அதிரடி பேச்சு!

0
368
Warner

உலகக் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பாரம்பரியத்தைக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு, பெரிய கறையாக அமைந்தது 2018ஆம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய விவகாரம்.

2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது, கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர், மேலும் அணியின் துவக்க ஆட்டக்காரர் பான்கிராப்ட் மூவரும் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கையும் களவுமாக சிக்கினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து விசாரணைக்குப் பிறகு இவர்கள் மூவருக்கும் ஒரு ஆண்டு ஒட்டு மொத்த கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையின் மூலமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் விமர்சனங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள பார்த்தது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாக வெற்றிக்கு கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாகவே வீரர்கள் இப்படி தவறான வழியில் செல்ல நேர்ந்தது. கடைசியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தப்பித்துக் கொள்ள, மூன்று வீரர்களும் இதற்கு பலியானார்கள்.

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் மற்ற இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் டேவிட் வார்னர் எப்பொழுதும் அதை ஒப்புக் கொள்ளவே கிடையாது. இது அவர் மீது வெளியில் இருந்து நிறைய விமர்சனங்களை உருவாக்கியது. மேலும் தடைக்காலத்தில் அவர் நிறைய அவமானங்களையும் சந்தித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் அதுகுறித்து முழுமையாக மௌனம் கலைத்து பேசிய டேவிட் வார்னர் “பந்தை சேதப்படுத்திய விவகாரத்தையும், அந்த ஒட்டுமொத்த காலக்கட்டத்தையும் நினைத்துப் பார்த்தால் அதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. உங்களுக்கு வாழ்வில் எப்பொழுதும் நிறைய தடைகள் வரும். நீங்கள் அதை விட்டு முன்னோக்கி நகர வேண்டும். நான் இந்த வேலையை மிகுந்த கண்ணியத்துடன் செய்திருக்கிறேன்.

எனக்கு விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் இருக்கிறது. எப்பொழுதும் அதற்கென நான் திருப்பித் தருவது என்பது எனது கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானது. அதாவது இங்கு மரியாதையை பெறுவது மட்டும் முக்கியம் அல்ல, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்.

நான் ஆப்பிரிக்காவை விட்டு வெளியில் வந்த பொழுது என்னை ஐந்து ஆறு பாதிரியார்கள் சந்தித்தார்கள். என்னிடம் ஒரு அட்டையை கொடுத்தார்கள். பிறகு நாங்கள் சிங்கப்பூருக்கு விமானத்தில் சென்றோம். அங்கே பெரிய சர்ச் மாநாடு நடைபெற்றது. நான் அங்கிருந்து திரும்பி கிரேடு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். இந்த இரண்டு விஷயங்களும் சமூகத்தின் நம்பிக்கையை பெறுவதற்கு அந்த நேரத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன!” என்று கூறி இருக்கிறார்!