“தயவு செய்து பயிற்சி போட்டியில் ஜடேஜாவை வைத்து இதை செய்யுங்க!” – இர்பான் பதான் வெளிப்படையான பேச்சு!

0
3043
Jadeja

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஒருநாள் உலகக் கோப்பை தொடரை முழுமையாக இந்தியா நடத்த இருக்கிறது!

நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பைத் தொடர் மிகக் கோலாகலமாக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், அக்டோபர் ஐந்தாம் தேதி, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் மூலம் துவங்குகிறது!

- Advertisement -

இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நாளை முதல் நடைபெற இருக்கின்றன. தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளுக்கும் தலா இரண்டு பயிற்சி போட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நாளை நடைபெற இருக்கும் பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் இலங்கையை எதிர்த்தும், ஆப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், நியூசிலாந்து பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் விளையாட இருக்கின்றன.

நாளை மறுநாள் அக்டோபர் 30-ஆம் தேதி இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் மிக முக்கியமான அணியான இங்கிலாந்து அணியை எதிர்த்து அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் விளையாடுகிறது. இதற்கடுத்து தனது இரண்டாவது பயிற்சி போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் அக்டோபர் மூன்றாம் தேதி விளையாடுகிறது.

- Advertisement -

நடைபெற இருக்கும் பயிற்சி போட்டிகள் அனைத்தும் நாளை துவங்கி அக்டோபர் மூன்றாம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. நான்காம் தேதி ஓய்வு நாளாக இருந்து ஐந்தாம் தேதி கோலாகலமாக 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் துவங்குகிறது.

பயிற்சி போட்டியை இந்தியா எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பேசி உள்ள இர்பான் பதான் “பயிற்சி போட்டிகளில் முக்கியத்துவம் என்பது நட் போல்டுகளை இறுக்குவது போன்றது ஆகும். எனவே இந்திய அணிக்கு இரண்டு பயிற்சி போட்டிகள் உள்ளன. அந்த ஆட்டங்களில் அவர்கள் ஜடேஜாவின் பேட்டிங்கை பரிசோதிப்பது, தங்களுக்கு தேவையான காம்பினேஷன்களை சரி பார்ப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.

சிறந்த பார்மில் இல்லாத வீரர்களுடன் முன்னோக்கி சிந்தித்து அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக அவர்கள் கடைசி சில ஓவர்களில் தங்களை பரிசோதித்துக் கொள்ள முடியும். இதெல்லாம் வார்ம் அப் போட்டிகளில் விளையாடுவதால் கிடைக்கும் பயன்கள்!” என்று கூறி இருக்கிறார்!