பிட்ச் நல்லா இருந்தா விக்கெட் எடுப்பார் ரன் எடுப்பார்.. இவர் யுவராஜ் சிங்கா? – ஜடேஜாவை மீண்டும் வம்புக்கு இழுத்த மஞ்சரேக்கர்!

0
1058
Jadeja

இந்திய வெள்ளைப்பந்து அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சுழற் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இருவரும் வழங்குகின்ற சமநிலை மிகப்பெரியது. இந்த இரண்டு ஆல் ரவுண்டர்கள் இந்திய அணியில் இல்லை என்றால், இந்திய அணியின் ஒட்டுமொத்த சமநிலையும் சீர்குலையும்!

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய பேட்டிங் தரத்தை என்னவென்று வழியில் காட்டினார். அவர் விளையாடிய மிகச்சிறந்த இன்னிங்ஸ் அது.

- Advertisement -

அதே சமயத்தில் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் நேபாள் பேட்ஸ்மேன்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

நேற்றைய ஒரு விவாதத்தில் இவர்கள் இருவரையும் பற்றி பேசிய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனுஸ்
“ஹர்திக் மற்றும் ஜடேஜா இருவரும் மேஜைக்கு கொண்டுவரும் விஷயங்களை பாருங்கள். அவர்கள் இருவரும் பேட் மற்றும் பந்து என சிறப்பாக இருக்கிறார்கள். குறிப்பாக ஹர்திக் பாண்டியா. அவர் பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்த விதம், உண்மையில் அவர் நம்பர் ஆறில் அபாயகரமான பேட்ஸ்மேன்.

அவரைப் போன்ற ஒருவரை பெற எந்த அணியும் விரும்புவார்கள். அவர் ஆக்ரோஷமானவர். அதே சமயத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பார்த்தது போல் அவர் விவேகமானவர் மற்றும் புத்திசாலி!” என்று கூறினார்.

- Advertisement -

இதற்கு இடைமறித்து பேசிய இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் “யுவராஜ் சிங் இந்தியாவின் சிறந்த வெள்ளைப்பந்து பேட்டர். அவரால் கேம்களை வெல்ல முடியும் என்று தனி லீகில் இருந்தார். ஆனால் ஹர்திக் மற்றும் ஜடேஜா அதே லெவலில் கிடையாது. இவர்கள் இருவரும் யுவராஜ் சிங் விட நல்ல பவுலர்கள். ஆனால் அவரிடம் இருந்த ஒரு தனி விஷயம் இவர்களிடம் கிடையாது.

ஹர்திக் பாண்டியா நன்றாக பேட்டிங் செய்திருந்தாலும் கூட யுவராஜ் சிங் கிடையாது. ஹர்திக் பாண்டியாவை இப்பொழுது உள்ள கட்டத்தில் எடுத்துக் கொண்டால், அவர் ஒரு முக்கிய பந்துவீச்சாளர் என்று வந்து பத்துபவர்கள் வீசுவார் என்று சொல்ல முடியாது. அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர்.

ஜடேஜா மற்றும் ஹர்திக் இவர்கள் இருவரும் அணிக்கு ஆல் ரவுண்டராக ஒருங்கிணைந்த திறமையை வைத்திருக்கிறார்கள். ஆனால் நான் முன்பே சொன்னது போல யுவராஜ் சிங் போல அந்த லெவல் திறமை கிடையாது. ஜடேஜா பந்துவீச்சு மற்றும் பேட்டிங்க்கு உதவும் ஆடுகளத்தில் சிறப்பாக இருப்பார். ஹர்திக் பாண்டியா ஒரு பேட்டராக எல்லா வகை பந்துகளையும் விளையாடக் கூடியவர்தான்!” என்று கூறியிருக்கிறார்!