“ரோகித்துக்கு இன்னும் மனக்காயம் ஆறல.. மும்பை என்ன வேணா செய்யட்டும்!” – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேச்சு!

0
158
Rohit

நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு மீண்டும் இந்திய அணியின் டி20 கேப்டனாக ரோஹித் சர்மா வந்திருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்வாரா? விராட் கோலியின் சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா? என்பதான கேள்விகள் நிறைய வெளியில் இருந்து வந்தன.

- Advertisement -

மேலும் இவர்கள் இருவரும் கிடைப்பார்களா இல்லையா? என்பது வருகின்ற டி20 உலகக் கோப்பை இந்திய அணியை உருவாக்குவதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பெரிய தடைக்கல்லாகவும் இருந்து வந்தது.

தற்பொழுது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்பது இதன் மூலம் மிகத் தெளிவாகத் தெரிந்து விட்டது. எனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தேவையில்லாத பரிசோதனை முயற்சிகளில் இனி இறங்காது. மேலும் கேப்டனாக ரோஹித் சர்மாதான் டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு இருப்பார் என்பதும் உறுதியாகியிருக்கிறது.

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது ” டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ரோகித் சர்மாதான் கேப்டனாக இருக்கப் போகிறார். வெளிப்படையாக பார்த்தால் ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமாகவில்லை. இன்னொரு பக்கம் சூரிய குமார் யாதவும் காயத்தில் இருக்கிறார். கேப்டனாக பும்ராவும் வருவதற்கு வாய்ப்பில்லை. இதன்படி பார்த்தால் ரோஹித் சர்மா தான் கேப்டன்.

- Advertisement -

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்குவது அந்த உரிமையாளர்களுடைய விருப்பம். ஆனால் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு கேப்டனாக ரோஹித் சர்மா மட்டுமே இருக்க முடியும். இதை நோக்கிதான் தற்போது நகர்வுகள் இருக்கிறது.

இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா உலகக் கோப்பையில் விளையாடியது போல முழு சுதந்திரத்துடன் தாக்குதல் பாணியில் விளையாடுவார். உலகக் கோப்பையை இழந்த மனக்காயம் அவருக்கு இன்னும் ஆறவில்லை. அன்று ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தி இருந்தால் தற்போது எல்லாமே மாறி இருக்கும்.

ரோகித் சர்மா தற்பொழுது ஒரு கேப்டனாக ஒரு உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறார். டி20 உலகக்கோப்பையை விட 50 ஓவர் உலகக்கோப்பைதான் பெரியது. ஆனாலும் கூட நாள் முடிவில் உலகக்கோப்பை என்று வரும் பொழுது எல்லாம் ஒன்றுதான். இறுதியாக ரோகித் சர்மா உலகக் கோப்பையை வென்று நிரூபிக்க நினைக்கிறார். அவர் உலகக் கோப்பையை வெல்வதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது!” என்று கூறியிருக்கிறார்!