நியூசி பாக் டி20 தொடர் அட்டவணை வெளியீடு.. ஐபிஎல் 2024-ல் நியூசிலாந்து வீரர்கள் ஆடுவார்களா?

0
684
Pakistan

இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக மிக வெற்றிகரமாக நடத்தி வரும் டீ 20 கிரிக்கெட் லீக் ஐபிஎல் தொடர் வருகின்ற 22ஆம் தேதி துவங்க இருக்கிறது. அரசியல் காரணங்களால் எதிர்காலமாக ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிப்பதில்லை.

உலகம் முழுவதிலும் இருந்து குறிப்பாக அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய கிரிக்கெட் நாடுகளில் இருந்தும் ஐபிஎல் விளையாடுவதற்காக வீரர்கள் வருகிறார்கள். மேலும் உலகம் முழுவதிலும் உருவாகும் கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் ஒரு முறையாவது ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டும் என்கின்ற புதிய கனவுகள் உருவாகி வருகிறது. அந்த அளவிற்கு உலக கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரின் வெற்றி ஆதிக்கம் செலுத்துகிறது.

- Advertisement -

இதன் காரணமாக ஐபிஎல் நடைபெறும் இரண்டு மாதங்கள் முழுவதும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற பெரிய கிரிக்கெட் நாடுகள், தங்களது சர்வதேச போட்டி அட்டவணைகள் எதையும் இந்த காலகட்டத்தில் வைக்காமல் இருக்கின்றன. இதன் காரணமாக இந்த இரு நாடுகளின் வீரர்கள் முழுமையாக ஐபிஎல் தொடருக்கு கிடைக்கிறார்கள்.

மேலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற அடுத்த பெரிய கிரிக்கெட் நாடுகளும் இவ்வாறே தங்களது சர்வதேச போட்டி அட்டவணையை தளர்த்தி ஐபிஎல் தொடரில் பங்கு பெறுவதற்கு வசதியாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் வீச்சு உலகெங்கும் பரவி இருக்கிறது.

இப்படியான காலகட்டத்தில் பாகிஸ்தான் அணி மட்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாமல் இருப்பதால், அந்த இரண்டு மாதங்கள் அவர்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது, பொருளாதார ரீதியாகவும் பயிற்சி ரீதியாகவும் அவர்களை பின்னடைவுக்கு தள்ளும். எனவே ஐபிஎல் நடைபெறும் நேரத்தில் குறைந்தபட்சம் அவர்கள் இரண்டு தொடர்களை ஆவது விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த முறை அவர்கள் ஏப்ரல் மாதம் 18 முதல் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறார்கள். கடந்த 17 மாதங்களில் மட்டும் நியூசிலாந்து அணி மூன்றாவது முறையாக பாகிஸ்தானுக்கு வர விருப்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக இழந்து நாடு திரும்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தோனி இப்ப ஆடுறதே இதனாலதான்.. என்கிட்ட அப்பவே காரணத்தை சொல்லிட்டார் – ஆர்பி.சிங் பேட்டி

இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகள் ஏப்ரல் 18, 20, 21 ஆம் தேதிகளில் ராவல்பிண்டி மைதானத்தில் நடக்க இருக்கின்றன. கடைசி இரண்டு போட்டிகள் ஏப்ரல் 25 மற்றும் 27ஆம் தேதியில் லாகூர் மைதானத்தில் நடக்க இருக்கின்றன. அதே சமயத்தில் இந்தத் தொடரில் ஐபிஎல் தொடரில் விளையாடும் நட்சத்திர நியூஸிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நியூசிலாந்து அணியே பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.