ஒரே ஒரு உண்மையான கிங் விராட் கோலிதான் ; நீ கிடையாது – பாபர் ஆசமை ட்விட்டரில் தாக்கிய முகமது ஆமீர்!

0
784
Viratkohli

நேற்று ஐபிஎல் தொடரில் முக்கியமான போட்டியில் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மைதானத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பில் பெங்களூரு அணி தொடர்கிறது!

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணிக்கு ஹென்றி கிளாஸன் 51 பந்துகளில் 14 ரன்கள் குவித்து அட்டகாசப்படுத்த ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் வந்தது.

- Advertisement -

வென்றே ஆக வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு இந்த முறை விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து அவர் தைரியமாக அடித்து விளையாட ஆரம்பித்தார்.

மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இது அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆறாவது சதம் ஆகும். அவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

விராட் கோலியின் இந்த மிகச் சிறப்பான ஆட்டத்திற்கு பல வீரர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

- Advertisement -

இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமீர் தனது பாராட்டை விராட் கோலிக்கு தெரிவித்து இருக்கிறார். ஆனால் அந்தப் பாராட்டு வழக்கமான ஒன்றாக இல்லை.

முகமது அமீர் தனது வீட்டில் “என்ன மாதிரியான ஆட்டம்! ஒரே ஒரு உண்மையான கிங் விராட் கோலிதான். அவருக்கு தலை வணங்குகிறோம்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த ட்விட் எதனால் பிரச்சனையாகிறது என்றால், பாகிஸ்தானின் பாபர் ஆசமை கிங் என்று அங்கு சொல்லி வருகிறார்கள். ஆனால் ஒரே ஒரு கிங் விராட் கோலிதான் என்று முகமது ஆமீர் குறிப்பிட்டிருக்கிறார்.

முகமது ஆமீருக்கும் பாபர் ஆசமுக்கும் தனிப்பட்ட முறையில் நிறைய பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது. அவர் பாகிஸ்தான் அணிக்குள் மீண்டும் வர முடியாததற்கு பாபர் ஆசம்தான் முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதனால் இவர்களது பகை பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரிலும் எதிரொலித்தது. அப்போது நிறைய சர்ச்சையான சம்பவங்கள் நடந்தது. தற்பொழுது இந்த ட்விட்டின் மூலம் முகமது அமீர் அதை மீண்டும் தொடர்ந்திருக்கிறார்!